வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,:டில்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கானை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ஆக்லா தொகுதி எம்.எல்.ஏ.,வாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமானதுல்லா கான் பதவி வகித்து வருகிறார். இவர், வக்பு வாரியத்தின் தலைவராகவும் உள்ளார். டில்லி வக்பு வாரியத்தில் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2020ல் டில்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமானதுல்லா கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கானின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, 24 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் உரிமம் இல்லாத இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப் பட்டன. இதையடுத்து, கானை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement