தாமரை கோபுரத்தின் முதல் நாள் வருமானம்

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான தாமரைக் கோபுரம் நேற்று (15) பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன், நேற்று நுழைவுச் சீட்டு விற்பனை ஊடாக ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இதன் முதல்நாள் வருமானம் சுமார் 15 இலட்சத்தை அண்மித்துள்ளது என்று நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று சுமார் 2612 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளனர். அவர்களில் 21 வெளிநாட்டவர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தாமரை கோபுரத்தை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்காக வேண்டி  நேற்று இரவும்  ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.