தொடரின் Promising Young Player விருதை வென்ற Linda Fruhvirtova!
சென்னை ஓப்பன் 2022 தொடரின் Most Promising Young Player விருதை செக் குடியரசின் 17 வயது வீராங்கனை Linda Fruhvirtova-க்கு வழங்கினார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் வீ. மெய்யநாதன்.
V. Gracheva-ஐ வெளியேற்றிய L.Fruhvirtova!
இரண்டாம் காலிறுதி ஆட்டத்தில் தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனை V. Gracheva-ஐ 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் செக் குடியரசின் 17 வயது L.Fruhvirtova.
அரையிறுதிக்கு முன்னேறிய Nadia Podoroska!
E.Bouchard-ஐ 6-1, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சென்னை ஓப்பன் 2022 தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் வீராங்கனையாக தகுதிப்பெற்றுளார் Nadia Podoroska.
மழை காரணமாக தடைபட்ட ஆட்டம்….
மூன்றாவது செட்டில் 3-0 என்ற கணக்கில் N.Podoroska முன்னிலை வகிக்க மழை காரணமாக தற்காலிகமான நிறுத்தப்பட்டது ஆட்டம்.
மூன்றாவது செட்டிற்கு செல்லும் ஆட்டம்!
முதல் செட்டை 1-6 என்று இழந்த Podoroska இரண்டாவது செட்டை 6-4 என்று போராடி வென்றார்.
சென்னை ஓப்பன் 2022 தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகள் இன்று தொடக்கம்
முதல் போட்டியாக கனடாவின் E.Bouchard மற்றும் அர்ஜென்டினாவின் N.Podoroska ஆகியோர் சென்டர் கோர்ட்டில் மோதல்.