புதுடில்லி, :பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாளை இன்று கொண்டாட, பா.ஜ., சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, 1950ம் ஆண்டு செப்., 17ல் குஜராத்தில் பிறந்தார். இளமைக் காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பில் இணைந்து செயலாற்றிய அவர், பா.ஜ.,விலும் தொண்டர் நிலையில் இருந்து படிப்படியாக உயர்ந்து, குஜராத் மாநில முதல்வர் பதவியை அடைந்தார்.
பா.ஜ., மேலிடம், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது.தேர்தலில் வெற்றி வாகை சூடிய நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை ஏற்றார். இதைத்தொடர்ந்து, 2019ல் நடந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ளார்.
இன்று 72வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமருக்கு, உள்ளூர் தலைவர்கள் முதல், உலக தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாட்டு மக்களும் கொண்டாடி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பா.ஜ., சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரிவான செய்தி உள்ளே…
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement