தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன்? அமலாபால் கொடுத்த பதில்
கடாவர் படத்தை அடுத்து மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். சமீபத்தில் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் அந்த கதாபாத்திரம் தனக்கு பிடிக்காததால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருந்த அமலா பால், தற்போது ஒரு பேட்டியில், தெலுங்கு படங்களில் ஏன் அதிகமாக நடிப்பதில்லை என்ற கேள்விக்கு ஒரு விளக்கம் கொடுத்தார்.
அதில், தெலுங்கு சினிமாவிற்கு சென்றபோது அங்கு குடும்பங்களின் கான்செப்ட் அதிகமாக இருந்தது. அந்த திரை உலகமே அந்த குடும்பங்கள் மற்றும் அதன் ரசிகர்களால் தான் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் எடுத்து வரும் திரைப்படங்களில் இரண்டு கதாநாயகிகள், காதல் காட்சிகள், பாடல்கள் எல்லாமே கவர்ச்சிகரமாக மட்டுமே இருந்தது. அந்த அளவுக்கு தெலுங்கு சினிமா முழுக்க முழுக்க கமர்சியலாக இருந்ததால் அந்தப் படங்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. அதனால் தான் தெலுங்கு சினிமாவில் இருந்து அதிகமான படங்கள் வந்த போதும் குறைவான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தேன் என்று தெரிவித்துள்ள அமலாபால், தொடர்ந்து எந்த மொழியாக இருந்தாலும் மாறுபட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில், தான் அதிக ஆர்வமாக இருப்பதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.