விமான பயணம் வேண்டாம்.. ரயிலே போதும்.. வங்கி சிஇஓ முடிவால் குவியும் பாராட்டுக்கள்

பிரபல வங்கியான பந்தன் வங்கியின் சிஇஓ சந்திரசேகர் கோஷ் அவர்கள் விமானத்தில் செல்லும் அளவுக்கு வசதி இருந்தும் அவர் ரயில் பயணத்தை தேர்வு செய்தார்.

ரயிலில் பயணம் செய்வதை தான் தாழ்மையாக எண்ணவில்லை என்றும், தனக்கு ரயில் பயணம் வசதியாக இருப்பதாகவும் ஒவ்வொரு பணக்காரரும் ரயிலில் பயணம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பந்தன் வங்கி தலைவர் சந்திர சேகர் கோஷ் அவர்களின் இந்த எளிமை குறித்து நெட்டிசன்கள் பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கிரிப்டோகரன்சியின் எதிர்காலம் இப்படி தான்.. பச்சை கொடி காட்டிய விஜய் சேகர் ஷர்மா..!

பந்தன் வங்கி தலைவர்  சந்திர சேகர் கோஷ்

பந்தன் வங்கி தலைவர் சந்திர சேகர் கோஷ்

பணக்காரர்களுக்கு விமானங்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண விருப்பமாக இருக்கும் நேரத்தில், பந்தன் வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்திர சேகர் கோஷ், விமானத்திற்கு பதிலாக எளிமையான ரயிலில் பயணம் செய்ய முடிவு செய்திருப்பது அவரது சக ஊழியர்களிடமிருந்து பாராட்டுதல்களை பெற்றுள்ளது. பந்தன் வங்கியின் மார்க்கெட்டிங் ஹெட் அபூர்வா சிர்கார் அவர்கள் கோஷ் அவர்களுடன் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு ஒன்றாக பயணித்தபோது ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

ரயில் பயணம்

ரயில் பயணம்

டெல்லியில் இருந்து சண்டிகருக்கு விமானத்தில் பயணம் செய்தால் ஒரு மணி நேரம் பயணம் மற்றும் சில நிமிடங்கள் காத்திருப்பு நேரமாக இருக்கும் என்று சிர்கார், பந்தன் வங்கி தலைவர் சந்திர சேகர் கோஷ் இடம் சுட்டிக்காட்டியதோடு, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றால் 4 மணி நேரம் ஆகும் என்றும் கூறினார். ஆனால் பந்தன் வங்கி தலைவர் சந்திர சேகர் கோஷ் ரயில் பயணத்தில் உறுதியாக இருந்தார்.

எளிமை
 

எளிமை

ரயில் பயணத்தில் சில மணி நேரம் தாமதம் ஆனாலும், அதில் அனைத்து பணக்காரர்களும் பயணிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், உலகின் வளர்ந்த நாடுகளில் உள்ள பல தொழிலதிபர்கள் ரயிலில் தான் பயணம் செய்வதாகவும் அவர் எளிமையோடு கூறியதாக சிர்கார் நினைவு கூர்ந்தார்.

பொது போக்குவரத்து

பொது போக்குவரத்து

ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாங்க முடியும் என்ற அளவுக்கு வசதி இருந்தாலும் இன்னும் வாரன் பஃபெட் எகானமி வகுப்பில் தான் பயணிக்கிறார் என்ற ஒரு உதாரணத்தையும் அவர் தெரிவித்தார். பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள பல உயர் பதவியில் இருப்பவர்கள் இன்னும் பொது போக்குவரத்தை தான் பயன்படுத்துவதாக அவர் கூறினார்.

 பாராட்டு

பாராட்டு

இந்த தகவலை சிர்கார் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்த நிலையில் சந்திர சேகர் கோஷின் பணிவு மற்றும் எளிமையை பாராட்டிய பயனர்கள் சந்திரசேகரை போன்ற ஒரு பணிவானவர்களிடம் இருந்து இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று தெரிவித்தனர்.

கிராமங்களை பார்க்கவே ரயில் பயணம்

கிராமங்களை பார்க்கவே ரயில் பயணம்

5000 ரூபாயில் ஆரம்பித்து தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள பந்தன் வங்கியின் சந்திரசேகர் போன்ற ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை. கிராமப்புறங்களை பார்ப்பதற்காகவே அவர் ரயிலில் பயணம் செய்துள்ளார் என நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bandhan Bank CEO Ghosh Travels By Shatabdi Express journey over air travel

Bandhan Bank CEO Ghosh Travels By Shatabdi Express journey over air travel | விமான பயணம் வேண்டாம்.. ரயிலே போதும்.. வங்கி சி.இ.ஓ முடிவால் குவியும் பாராட்டுக்கள்

Story first published: Friday, September 16, 2022, 7:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.