காசர்கோடு: கேரளாவில் தெரு நாய்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக ஏர் கன்னுடன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் தெருநாய்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் தெருநாய்களால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், சமீர் என்பவர் ஏர் கன்னை ஏந்தியபடி பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக சமீர் கூறுகையில்,பேட்டியில், ‘‘எங்கள் பகுதியில் தெருநாய்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு அஞ்சுகிறார்கள். எனவே, ஏர் கன்னுடன் அவர்களை அழைத்து செல்கிறேன். சட்டரீதியான நடவடிக்கை குறித்து எனக்கு பயமில்லை,’ என தெரிவித்துள்ளார்.