மீண்டும் 3வது இடத்தில் அதானி.. 4வது இடத்தில் ஜெஃப் பிஜாஸ்.. அப்ப 2வது இடத்தில் யார்?

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி நேற்று உலக பணக்காரர் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறினார் என்பதை பார்த்தோம்.

ஆனால் நேற்று இந்திய பங்குச் சந்தை 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததன் அதானியின் சொத்து மதிப்பு குறைந்தது. இதனை அடுத்து அவர் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

நான்காவது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜாஸ் உள்ளார். இந்த நிலையில் இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் டாப் பில்லியனர்கள் லிஸ்டில் 2வது இடத்தில் கெளதம் அதானி.. முதலிடம் எப்போது?

 ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியல்

ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியல்

உலக பணக்காரர் பட்டியலில் பட்டியலிட்டு வரும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் ரியல் டைம் அதிக சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம்போல் டெஸ்லா நிறுவனர் முதலிடத்தில் உள்ளார். அவர் $273.2 பில்லியன் சொத்து மதிப்புடன் உள்ளார்.

மீண்டும் 3வது இடத்தில் அதானி

மீண்டும் 3வது இடத்தில் அதானி

இந்த நிலையில் நேற்று 2வது இடத்தில் இருந்த அதானி குழுமம் இன்று $152.2 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் தள்ளப்பட்டது. நேற்று இந்திய பங்கு சந்தை படுமோசமாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்ததால் அவர் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

2வது இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட்
 

2வது இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட்

இந்த நிலையில் உலக பணக்காரர் பட்டியலின் 2வது இடத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். அவருக்கு 1$54.7 பில்லியன் சொத்து மதிப்பு இருப்பதால் அவர் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

4வது இடத்தில் ஜெஃப் பிஜாஸ்

4வது இடத்தில் ஜெஃப் பிஜாஸ்

இந்த நிலையில் கடந்த வாரம் வரை உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜாஸ் தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் அவருடைய சொத்து மதிப்பு $146.9 பில்லியன் ஆக வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் 2வது இடம் எப்போது?

மீண்டும் 2வது இடம் எப்போது?

இந்நிலையில் அதானி குழுமத்தின் பங்கு நேற்று குறைந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் இன்னும் ஒரு சில நாட்களில் இரண்டாவது இடத்திற்கு மீண்டும் முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லா எலான் மஸ்க்கை முந்துவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Jeff Bezos Slips To No. 4, not only Adani but also Bernard Arnault

Jeff Bezos Slips To No. 4, not only Adani but also BernardArnault | மீண்டும் 3வது இடத்தில் அதானி.. 4வது இடத்தில் ஜெஃப் பிஜாஸ்.. அப்ப 2வது இடத்தில் யார்?

Story first published: Saturday, September 17, 2022, 8:13 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.