ஊர் கட்டுப்பாடு.. திண்பண்டம் கொடுக்க முடியாது.. பட்டியலின மாணவர்களிடம் கடைக்காரரின் தீண்டாமை

தென்காசி: தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமம். இந்த கிராமத்தில் ஆதிதிராவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இங்குள்ள ஒரு கடையில் அவர்கள் தினமும் திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். அது போல் நேற்றைய தினம் தேன் மிட்டாய், குருவி ரொட்டி உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.

கடைக்காரர்

அப்போது அந்த கடைக்காரர், சிறிதும் மனசாட்சியின்றி, “இந்த உள்ளூர் கடையில் திண்பண்டங்கள் யாரும் வாங்கக் கூடாது, நீங்கள் ஸ்கூலுக்கு போங்க, சரியா, உங்க வீட்லயும் எல்லாரிடமும் சொல்லுங்கள், திண்பண்டங்கள் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு! என்கிறார்.

குழந்தைகள்

குழந்தைகள்

அதையும் மீறி அந்த குழந்தைகள் அங்கேயே நிற்கிறார்கள். அதற்கு அந்த கடைக்காரர், கொடுக்க மாட்டோம்டா, இந்த ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு என்கிறார். அதற்கு அந்த குழந்தைகள் கட்டுப்பாடா அப்படின்னா என கேட்கிறார்கள். அதற்கு அவர் , ஆமாம் ஊரில் கூட்டம் போட்டு உங்களுக்கு திண்பண்டங்கள் கொடுக்கக் கூடாது என பேசியுள்ளார்கள் , சரியா போங்க என்கிறார். அந்த குழந்தைகளும் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.

தேன் மிட்டாய்

தேன் மிட்டாய்

ஒரு தேன் மிட்டாய் வாங்க வந்த இந்த குழந்தைகளிடம் தீண்டாமையா என்ற அதிர்ச்சி எழுந்துள்ளது. பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் வேளையில் எந்த தீண்டாமையை ஒழிக்க அவர் பாடுபட்டாரோ அதே தீண்டாமையை பிஞ்சு குழந்தைகளிடம் காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காண்போரை கலங்கடிக்கும் வீடியோ

காண்போரை கலங்கடிக்கும் வீடியோ

கடைக்காரர் காசு கொடுத்தும் திண்பண்டங்களை கொடுக்க மாட்டேன் என்கிறாரே என்ற ஏக்கத்துடனும் நமக்கு ஏன் கொடுக்க மாட்டேங்கிறார் என்ற புரிதலும் இல்லாமல் குழந்தைகள் ஒன்றும் புரியாமல் நிற்கும் காட்சி காண்போரை கலங்கடிக்கிறது. நடிகர் விவேக் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது… உங்களை எல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது…

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.