மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
இதன்காரணமாக, எதிரவரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை நிலையம் இன்று (17) அறிவித்துள்ளது.
இதேவேளை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.