உ.பி.யில் கனமழை சுவர் இடிந்து 13 பேர் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் தில்குஷா பகுதியில் ராணுவ வளாகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகின்றது. இதன் அருகே ஊழியர்கள் சிலர் குடிசை அமைத்து வசித்து வந்தனர்.  இந்நிலையில் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இதனால், நேற்று அதிகாலை சுற்றுசுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்தது.

இதில் 13 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கி இருந்த உடல்களை போலீசார் மீட்டனர். மேலும் பலத்த காயமுடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதேபோல் உன்னாவ் மாவட்டத்தில் கன்தா, ஜாலிஹய் ஆகிய கிராமங்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் சுவர் இடிந்து  விழுந்து பலியாகி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.