PM Narendra Modi Birthday: பிரதமருக்கும் எண் 8-க்கும் உள்ள சம்பந்தம் என்ன?

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆர்எஸ்எஸ் ஊழியராக இருந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமராகியுள்ள நரேந்திர மோடிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் வாழ்க்கை, போராட்டம், விடா முயற்சி மற்றும் உறுதியான தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அவர் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் மற்றும் ஊக்கத்தை அளிக்கும் ஒரு ஆளுமையாக உள்ளார். 

குஜராத்தின் வாட்நகரில் பிறந்து பள்ளிப்படிப்பு படித்த மோடி, தனது பதின் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, நாடு முழுவதும் பல மாதங்கள் சாதுக்களுடன் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது. அவர் சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு கொண்டார். இது அவரது வாழ்க்கையில் அவரது தத்துவங்களை வடிவமைத்தது. உலக வரைபடத்தில் இந்தியாவை முன்வைத்தவர்களில் அவருக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. அவரை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை இந்த பதிவில் காணலாம். 

பிரதமர் மோடியின் அதிர்ஷ்ட எண் 8

பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து பெரிய முடிவுகளிலும், எண் 8 எப்போதும் ஒரு சிறப்பு தற்செயல் நிகழ்வாக அமைந்து விடுகிறது. எண் கணிதத்தில் கூட்டுத்தொகை 8 ஆக வரும் 8, 26 மற்றும் 17 ஆகிய எண்கள் ரேடிக்ஸ் அல்லது மூலாங்க் என்று அழைக்கப்படுகின்றன.

எண் 8 உடன் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பு என்ன?

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17 அன்று பிறந்தார். இதன் கூட்டுத்தொகை 8. இவர் எடுத்த பெரும்பாலான முக்கிய முடிவுகள் 8, 26, 17 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்டுள்ளன. எண் 8-ஐ இவரது அதிர்ஷ்ட எண்ணாகவும் நிபுணர்கள் கூறுவதுண்டு. 

பிரதமர் நரேந்திர மோடியின் பெரும்பாலான முக்கிய முடிவுகளுடன் எண் எட்டு தொடர்புகொண்டுள்ளது. 2014 மக்களவை தேர்தலின் பிரச்சார தேதி மார்ச் 26 அன்று வைக்கபட்டது. இதன் கூட்டு 8 ஆகும். இரண்டாவதாக, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் மோடியின் வேட்புமனுத் தாக்கல் தேதி ஏப்ரல் 26 ஆகும். இதேபோல், எண் 8 -இன் ஆதிக்கத்தை இவர் எடுத்த பல முடிவுகளில் காணலாம். 

பிரதமர் நரேந்திர மோடி நான்காவது முறையாக குஜராத்தின் முதல்வராக பதவியேற்றபோது, ​​அன்றைய தேதியும் டிசம்பர் 26. மே 26 அன்று முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார். நாணய மதிப்பிழப்பு நீக்கம் போன்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்ட தேதி நவம்பர் 8. பிப்ரவரி 26 அன்று, பாகிஸ்தானின் பாலாகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடி 8 ஆம் எண்ணில் பிறந்தவர். இதுதவிர நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இவை எண் கணித வல்லுனர்களின் கணிப்புகளே. பிரதமருக்கு இவற்றில் நம்பிக்கை உள்ளது என்பதற்கு எந்த வித சான்றுகளோ கூற்றுகளோ இல்லை. எனினும், பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஆளுமைகளளுக்கு அனைத்து தேதிகளும் நல்ல தேதிகள்தான் என்பதையும் மறுப்பதற்கில்லை!!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.