ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. IBM சொல்வதை கேட்டீங்களா..?!!

இந்திய ஐடி சேவை துறை நாளுக்கு நாள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வந்தாலும் உலக நாடுகளில் உருவாகியுள்ள பொருளாதார மந்த நிலை அபாயம் வல்லரசு நாடுகளை மோசமாகப் பாதிக்க உள்ளது.

இதனால் ஐடி துறை பாதிக்கப்படுமோ என்ற கேள்வி பல லட்சம் ஐடி ஊழியர்கள் மத்தியில் இருக்கும் வேளையில் உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான டெக் சேவை நிறுவனமான ஐபிஎம் முக்கியமான ஒரு விஷயத்தைக் கூறியுள்ளது.

இதனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கை உருவாகியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி இப்படித்தான் இருக்கும்.. கவலை அளிக்கும் கணிப்பு..!

ஐபிஎம் நிறுவனம்

ஐபிஎம் நிறுவனம்

ஐபிஎம் நிறுவனம் பெரிய வர்த்தகம் மற்றும் வருவாய் சரிவுக்குப் பின்பு தற்போது தலைமை, வர்த்தகத் தந்திரம், முக்கியத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றம் மூலம் தற்போது வளர்ச்சி பாதைக்குத் திரும்பியுள்ளது.

உலகளாவிய வர்த்தகம்

உலகளாவிய வர்த்தகம்

இந்நிலையில் ஐபிஎம் தனது உலகளாவிய வர்த்தகத்திற்கு மையப்புள்ளியாக இருப்பது இந்தியாவும், இந்திய ஊழியர்கள் தான். இந்தியாவில் இருந்து தான் உலகிற்கான சாப்ட்வேர்-ஐ உருவாக்கி வருவதாக ஐபிஎம் தெரிவித்துள்ளது.

மையப் புள்ளியாக

மையப் புள்ளியாக

ஐபிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்கள் வளர்ச்சிக்கு இந்தியா மையப்புள்ளியாக உள்ளது. இந்தியாவில் செய்யும் பணிகள் இந்தியாவுக்கானது மட்டுமல்ல உலகிற்கானது என ஐபிஎம் உயர் துணை தலைவர் டாம் ரோசாமிலியா தெரிவித்துள்ளார்.

இந்தியா
 

இந்தியா

ஐபிஎம் இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், புவனேஷ்வர், கோயம்புத்தூர், குர்கான், ஹைதராபாத், புனே, மைசூரு மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளில் லேப்ஸ் மற்றும் அலுவலகங்களை வைத்துள்ளது.

160 நாடுகள்

160 நாடுகள்

ஐபிஎம் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு உலகில் சுமார் 160 நாடுகளில் இயங்கி வருகிறது. இதேவேளையில் கடந்த சில வருடத்தில் ஐபிஎம் நிர்வாகம் அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.

1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை

1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை

இது மட்டும் அல்லாமல் இந்தியாவில் மட்டும் ஐபிஎம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளது. மேலும் ஐபிஎம் கடந்த சில வருடத்தில் வன்பொருள் வர்த்தகத்தைத் தாண்டி மென்பொருள் துறையில் சுமார் 13 நிறுவனங்களைக் கைப்பற்றி விரிவாக்கம் செய்துள்ளது.

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

ஐபிஎம் மட்டும் அல்லாமல் உலகின் பெரும்பாலான பன்னாட்டு டெக் நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகத்தை அமைத்து அதிகப்படியான ஊழியர்களைச் சேர்த்து வருகிறது, இதற்கான காரணம் அனைவருக்கும் தெரியும்.

ரெசிஷன்

ரெசிஷன்

இந்த நிலையில் ரெசிஷன் அச்சம் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் டெக் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக ஊழியர்களை நியமித்துச் செலவுகளைக் கட்டுப்படுத்தி லாபத்தைப் பார்க்க முடியும். ஆனால் நெருக்கடி அதிகமானால் பணிநீக்கமும் செய்யப்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IBM invested more in India; India is at the core of IBM’s growth

IBM invested more in India than in any other country in the world; India is at the core of IBM’s growth. IBM employs more than 100,000 in india.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.