பெரிய ஆளுன்னா என்ன? ஹாலிவுட் போய்விட்டோம் அடுத்து என்ன? என சிம்பு சொன்ன உதாரணத்தை வைத்து மீண்டும் சிம்பு தனுஷ் மோதல் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் சிம்பு, தனுஷ் சாதாரணமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் இருவரும் நேரடியாக ட்விட்டரில் மோதிக்கொண்ட வரலாறு எல்லாம் உண்டு.
இருவரும் நேரடியாக சமீப ஆண்டுகளில் கருத்து சொல்லவில்லை என்றாலும், இருவரும் எது பேசினாலும் அது மற்றவரைப்பற்றித்தான் என தூக்கிக்கொண்டு ஒரு கூட்ட வந்துவிடுகிறது.
வெளிப்படையாக பேசும் சிலம்பரசன்
நடிகர் சிம்பு சினிமா உலகில் பரபரப்புக்கு பெயர் போனவர். மனதில் பட்டதை வெளியில் பட்டென்று பேசுவார். இடையில் தத்துவமழை பொழிவார். ஆன்மிகம் பேசுவார். திடீரென அமைதியாகிவிடுவார். சிம்புவின் வெளிப்படையான பேச்சே அவருக்கு பெரிய சிக்கலை கொண்டுவந்து சேர்த்தது. இதில் ஒரு பார்ட்தான் சிம்பு தனுஷ் மோதல். இவர்கள் இருவரும் வெளிப்படையாக பொது இடங்களிலும் தங்கள் நிலைப்பாட்டை சொல்கிறேன் என ஒருவருக்கொருவர் மறைமுகமாக பதில் சொல்ல அதைவைத்து இரு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னரே மோதல்
பத்து ஆண்டுகளுக்கு முன் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை த்னௌஷ் உருவாக்க நல்ல வரவேற்பை பெற்ற பாடல் திடீரென யூடியூபிலிருந்து நீக்கப்பட்டது. “அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்,” என்று தனுஷ் ட்வீட் செய்ய, உடனே சிம்பு தனது ட்விட்டரில், “காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே,” என்று ட்வீட் பண்ண மோதல் வலுத்தது.
இது பழைய மோதல்
அடுத்த சில நிமிடங்களில் தனுஷ், “பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு,” என்று கூறியிருந்தார். உடனே பதிலுக்கு சிம்பு, “உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது,” என தத்துவம் பேச இருவரின் மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோதலுக்கு முடிவே இல்லாமல் இப்பவும் தொடரத்தான் செய்கிறது என்கின்றனர் நெட்டிசன்கள்.
யூடியூப் பேட்டியில் தனுஷை வம்பிழுத்தாரா சிம்பு
இந்நிலையில் தனுஷ் ஹாலிவுட் படமான கிரே மேனில் நடித்துவிட்டார், தனுஷ் நடித்த மாநாடு வெற்றிபடமாக மாறியது என இருவர் வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கை நன்றாக போனது. இந்நிலையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியானது. இந்நிலையில் ஒரு பிரபல யூடியூப் சானலுக்கு சிம்பு பேட்டி அளித்துள்ளார். செய்தியாளர் சிம்புவிடம் இவ்வளவு திறமை இருக்கிறது ஆனால் ஒரு மனிதர் ஏன் உயர்ந்த இடத்திற்கு போகவில்லை, நான் இதை பாசிட்டிவாக தான் கேட்கிறேன் என கேட்கிறார்.
நான் ஹாலிவுட் நடிகர் ஆனால்..சிம்பு
இதற்கு பதில் அளிக்கும் சிம்பு நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது, ஏராளமான மனிதர்கள் இந்த கேள்விய என்னிடம் கேட்டுவிட்டார்கள், எனக்கு முதலில் உயர்ந்த இடத்துக்கு போகணும்னு என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, நாம எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் போய்விடலாம். உதாரணத்துக்கு சைக்கிள் வாங்கிட்டேன், மோட்டார் சைக்கிள் பார்க்கும்போது சைக்கிள் கம்மியாக இருக்கும். கார் பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் கம்மியாக தெரியும். இது சின்ன வயதிலேயே எனக்கு புரிந்துவிட்டது.
யார் பெரிய ஆள்
அதனால் நீங்கள் எவ்வளவு பெரிய இடத்துக்கு போனாலும் அடுத்த இடம் மீது ஆசை வரும். ஒரு பேச்சுக்கு நான் இப்ப ஹாலிவுட்டுக்கே போய் நடிச்சுட்டேன்னு வச்சுகுகங்க, அடுத்து என்ன. நீங்கள் எங்க வேண்டுமானாலும் போங்க அதிலிருந்து அடுத்ததை நோக்கி மக்கள் ஓட ஆரம்பிக்கிறார்கள். பெரிய ஆளாக ஆகி விடணும் என்று ஓடுகிறார்கள், பெரிய ஆள் என்றால் என்ன? யார் ஒருவர் அவர் வேலையை சரியாக செய்கிறாரோ அவர்தான் பெரிய ஆள்” என்று சொல்கிறார் சிம்பு.
பேட்டியை ஒட்டி வெட்டி போட்டு வம்பிழுக்கும் நபர்கள்
இதை வைத்து தனுஷ் ஹாலிவுட் நடிகர் பற்றி பேசியதை பற்றி மட்டும் வெட்டி உள்நோக்கத்துடன் பதிவிட அது சர்ச்சையாகி உள்ளது. ட்விட்டரில் ஒரு சாரர் தனுஷைத்தான் சொல்கிறார் சிம்பு, திடீரென ஹாலிவுட் பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேட்கின்றனர். சிலர் அவர் யாரையும் சொல்லவில்லை. என பதிலளிக்கின்றனர். ஒருவர் முழுப்பேட்டியையும் பார்த்துட்டு சொல்லுங்கடா அவர் சைக்கிள், மோட்டார் பைக்னு பல விஷயங்கள் சொல்கிறார் என பேட்டியின் ஆரம்பக்காட்சியுடன் போட்டுள்ளனர். எது எப்படியோ வாழ்க்கையின் அடிப்படையை அழகாக சொல்கிறார் சிம்பு. மனித மனம் நிலையில்லாதது என்பதே அவரது பேட்டியின் அடிப்படை.