ம.பி., காட்டுக்குள் விட்டார் பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நமீபியா நாட்டில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை தனது பிறந்த நாளில் பிரதமர் மோடி மத்திய பிரதேச காட்டுக்குள் திறந்து விட்டார்.

1948ல் இந்தியாவின் கடைசி சிறுத்தை இறந்தது. அதன்பிறகு நாட்டில் சிறுத்தை இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தை இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா வந்தடைந்தன.

நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை. கடைசியாக, சத்தீஸ்கரின் கோரியா பூங்காவில் இருந்த சிறுத்தை, 1948ல் இறந்தது. இதையடுத்து, 1952ல் இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

latest tamil news

இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் இந்தாண்டு ஜூலை 20ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிறுத்தைகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்குகிறது. இந்த சிறுத்தைகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்காக, நமீபியா சென்றடைந்த தேசிய விலங்கான புலி வடிவில் டிசைன் செய்யப்பட்ட சிறப்பு விமானம் மூலம் இந்த சிறுத்தைகள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு, இன்று (செப்., 17ம் தேதி) காலை அந்த வந்தடைந்தது.

latest tamil news

அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேசத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. பிரதமர் மோடியின் பிறந்த நாளான (17ம் தேதி) , இந்த சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.