விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு ஜெர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்தியுள்ளது.
ஒருபக்கம் ஜெர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உத்தரவுகளுக்கு இணங்க கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கத் திட்டமிட்டு இருந்தாலும், ரஷ்யா ஐரோப்பிய நாடுகளைப் பழிவாங்கும் விதமாக முந்திக் கொண்டது.
இந்த நிலையில் ஜெர்மனியில் இருந்த 3 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ஜெர்மனி அரசு கைப்பற்றியுள்ளது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு செக் வைத்த அரசு.. இனிமேல் பேபி பவுடர் தயாரிக்க முடியாதா?
ரஷ்யா – உக்ரைன் போர்
ரஷ்யா – உக்ரைன் போருக்கு முன்பு ஜெர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யா தான் மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையர். ரஷ்யாவின் பெரும்பாலான எரிபொருள் ஐரோப்பிய சந்தைக்கே செல்வதால் போருக்கு முன்பு வரையில் பெரிய அளவில் ரஷ்ய எரிபொருள் பிற நாடுகளுக்கு வராது.
ஜெர்மனி
ஆனால் போர் இரு தரப்புக்கும் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. ஜெர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் குளிர்காலத்தை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கும் வேளையில் ரஷ்யா திடீரென மொத்த எரிவாயு சப்ளையை நிறுத்தியுள்ளது.
ரஷ்யா-வின் Rosneft
இந்த நிலையில் ஜெர்மனி அரசு தற்போது அந்நாட்டில் இருக்கும் ரஷ்யா-வின் Rosneft நிறுவனத்திற்குச் சொந்தமான 3 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது. இது ரஷ்யா தனது எரிவாயு சப்ளை-ஐ நிறுத்தியதிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் செய்யப்பட்டு உள்ளது ஜெர்மனி அரசு.
3 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்
இதன் படி PCK Schwedt, Karlsruhe பகுதியில் இருக்கும் MiRo, Vohburg பகுதியில் இருக்கும் Bayernoil ஆகிய 3 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை முழுமையாக அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ஜெர்மனி நாட்டின் பொருளாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
PCK Schwedt சுத்திகரிப்பு ஆலை
இதில் PCK Schwedt சுத்திகரிப்பு ஆலை தான் ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் எரிபொருள் விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இதேவேளையில் ஜெர்மனி ஏற்கனவே முடிவு செய்துள்ள படி வருகிற டிசம்பர் மாதம் முதல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு என அனைத்தையும் வாங்குவதை நிறுத்த உள்ளது.
ஐரோப்பிய நாடுகள்
ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளுக்குத் தற்போது கச்சா எண்ணெய் இல்லாமல் தவிக்கிறது. அப்படிக் கிடைத்தாலும் பல நாட்கள் பயணத்துடன், அதிகப் போக்குவரத்து கட்டணத்துடன் அதிகமான விலையில் கிடைக்கிறது. இது கட்டாயம் அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
ரஷ்யா விளாடிமிர் புதின்
இதேபோல் ரஷ்யா-வின் ஏற்றுமதி வர்த்தகத்தை உடனடியாகச் சீர்படுத்த முடியாது, இதனால் பெரிய அளவிலான வர்த்தக இழப்பு மட்டும் அல்லாமல் தள்ளுபடியால் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இது ரஷ்யாவுக்கும் பாதிப்பு என்பதால் தான் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியைப் பெரிய அளவில் அதிகரிக்கப் புதின் திட்டமிட்டு வருகிறார்.
ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. IBM சொல்வதை கேட்டீங்களா..?!!
Germany seizes 3 Russia’s Rosneft oil refineries; vladimir putin next move
Germany govt seizes 3 Russia’s oil gaint Rosneft owned oil refineries in germany; what will be the vladimir putin next move to counter Germany govt actions