இந்திய வர்த்தகச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமம் பல துறையில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருவதால் அதன் வருமானம், மதிப்பு ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாகக் கடந்த சில மாதங்களாக முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி நிறுவனங்கள் ஓரே துறையில் போட்டிப்போட்டு வரும் நிலையில் இருவருக்கும் மத்தியிலான போட்டி நாளுக்கு நாள் பெரிதாகி வரும் வேளையில் கௌதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11 வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமம் மத்தியிலான போட்டியில் பல தசாப்தங்களாக டாடா குழுமம் தக்க வைத்திருந்த முதல் இடத்தை இழந்துள்ளது.
அதானி குழுமம்
சமீபத்தில் அதானி குழுமம் சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் இறங்குவதற்காக அம்புஜா சிமெண்ட் மற்றும் ACC நிறுவனத்தைக் கைப்பற்றிய, தற்போது அதானி குழுமத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.
டாடா குழுமம்
இந்தக் கைப்பற்றல் மூலம் சந்தை மதிப்பீட்டு அளவில் டாடா குழுமத்தின் மொத்த மதிப்பீட்டை கடந்து அதானி குரூப் முன்னேறியுள்ளது. பொதுவாகப் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் மதிப்பீட்டைத் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
குரூப் நிறுவனங்களின் மதிப்பீடு
ஆனால் டாடா குழுமம், அதானி குழுமம் ஆகியவை தனது வர்த்தகத்தைத் தனித்தனியாகப் பிரித்து மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு உள்ளதால், குரூப் நிறுவனங்களின் மொத்த மதிப்பீட்டையும் தற்போது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அம்புஜா சிமெண்ட் மற்றும் ACC
இதன் வாயிலாக அம்புஜா சிமெண்ட் மற்றும் ACC நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு குழும நிறுவன மதிப்பீடுகளின் அளவுகள் படி டாடா குரூப் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு அதானி குரூப் முதல் இடத்தைத் தொட்டு புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 22.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இதேபோல் டாடா குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 20.81 லட்சம் கோடி ரூபாய். 3வது இடத்தில் 17.07 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது.
60000 கோடி ரூபாயை இழப்பு
மேலும் வெள்ளிக்கிழமை-யின் மோசமான வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் 9 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 40000 கோடி ரூபாய் இழந்தது. இதேபோல் டாடா குரூப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 60000 கோடி ரூபாயை இழந்தது.
அதானி Vs டாடா
ஏசிசி மற்றும் அம்புஜா சிமென்ட் தவிர்த்து, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு இந்த ஆண்டுக் கிட்டத்தட்ட 10.16 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், டாடா குழுமம் அதன் முதன்மை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 17% சரிந்ததால், சந்தை மதிப்பீட்டில் 2.57 லட்சம் கோடியை இழந்துள்ளது.
Adani Group beats Tata Group in mcap become India’s most valuable business house, RIL 3rd place
Adani Group beats Tata Group in market capitalization become India’s most valuable business house, Mukesh Ambani’s reliance on industries took 3rd place