கூகுள் நிறுவனம் திடீரென தவறுதலாக ஹேக்கர் ஒருவருக்கு 2 கோடி ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளது.
2 கோடி ரூபாய் தனக்கு கூகுள் ஏன் அனுப்பி உள்ளது என்பது குறித்து ஆச்சரியமடைந்த அந்த ஹேக்கர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் தகவல் அளித்துள்ளார்.
இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போ ஸ்கெட்ச் ரிலையன்ஸ்-க்கு இல்லையா..? டாடா-வை முந்திய அதானி..!
கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் தங்கள் சேவையில் குறைகள் ஏதும் கண்டுபிடித்து தருபவர்களுக்கு வெகுமதி அளித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தற்செயலாக சாம் கர்ரி என்ற ஹேக்கருக்கு 250,000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய் அனுப்பி உள்ளது.
ரூ.2 கோடி பணம்
கூகுள் நிறுவனம் ஏன் தனக்கு இவ்வளவு பெரிய தொகையை அனுப்பி உள்ளது என்று சாம் கர்ரி ஆச்சரியம் அடைந்தார். இந்த நிலையில் இந்த பணத்தை கூகுள் அனுப்பி மூன்று வாரங்கள் மேல் ஆகிவிட்ட நிலையில் பணத்தை ஏன் அனுப்பியது என்பது குறித்த தகவலையும் கூகுள் தெரிவிக்கவில்லை.
கூகுளுக்கு தகவல்
இதனை அடுத்து சாம் கர்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூகுள் நிறுவனம் தனக்கு 250,000 டாலர் அனுப்பி உள்ளதாகவும் எதற்காக அனுப்பியது என்றே தெரியவில்லை என்றும் பதிவு செய்திருந்தார். மேலும் அதன் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவர் தனது இணையதளத்திலும் பதிவு செய்திருந்தார்.
தவறுதலாக அனுப்பப்பட்ட பணம்
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் அதற்கு பதில் அளித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரியின் தவறு காரணமாகவே இந்த பணம் தவறாக உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த விவரத்தை எங்களுக்கு தெரிவித்ததற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் என்றும், இதை சரி செய்ய நாங்கள் தற்போது பணியாற்றி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு டாலர் கூட செலவு செய்யவில்லை
கூகுள் நிறுவனம் தன்னுடைய வங்கி கணக்கில் 250,000 டாலர் அனுப்பி இருந்த நிலையில் அந்த பணம் எதற்காக அனுப்பப்பட்டது என்று தெரியும் வரை ஒரு டாலர் கூட கூட செலவு செய்வதில்லை என்ற எண்ணத்தில் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மென்பொருளில் பிழை
சாம் கர்ரி ஒமாஹாவில் உள்ள யுகா லேப்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு பொறியாளராக உள்ளார். பல நிறுவனங்களுக்கு மென்பொருளில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்து அதற்கான வெகுமதிகளை பெற்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கூகுள் நிறுவனத்தின் எந்த ஒரு பிழையையும் தான் கண்டுபிடிக்காத நிலையில் தனக்கு இந்த பணம் வந்தது மர்மமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Google accidentally paid Rs 2 crore to a hacker. What happened next
Google accidentally paid Rs 2 crore to a hacker. What happened next | ஹேக்கருக்கு ரூ.2 கோடி அனுப்பிய கூகுள்.. என்ன காரணம்?