வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு சமையல் அறையில், எக்சாஸ்ட் மின்விசிறி மற்றும் எல்இடி லைட் வைத்து கஞ்சா செடிவளர்த்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் காக்காநாட் மாவட்டத்தில் நிலம்பதின்ஜமுஹல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில், போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஆலன்(26) மற்றும் அவரது காதலி அபர்ணா(24) வீட்டில் சமையல் அறையில் கஞ்சா செடி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 4.5 மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் கஞ்சா வளர்ப்பது குறித்து ஆய்வு செய்து ஆன்லைன் கஞ்சா செடி வாங்கி சமையல் அறையில் வைத்து வளர்ந்து வந்துள்ளனர்.
1.5 மீ., உயரம் வளர்ந்த அந்த கஞ்சா செடிக்கு காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காக எக்சாஸ்ட் மின்விசிறியும், வெளிச்சத்திற்காக , செடியின் மேல் எல்இடி லைட்டையும் கட்டி வைத்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். அவர்களின் வீட்டிற்கு அருகில் வசித்த அமல்(28) என்பவரை சாட்சிக்காக அழைத்தனர். அவர் மீது சந்தேகம் கொண்டு, அவரது வீட்டிலும் சோதனை நடத்தியதில் கஞ்சா கிடைத்துள்ளது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement