மும்பை: ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் தயாரிப்புக்கான உரிமத்தை இன்று(செப்., 17) மகாராஷ்டிரா அரசு ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரை 1894ம் ஆண்டு முதல் சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், டால்கம் பவுடரில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெடாஸ் காரணமாக குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்நிறுவனத்துக்கு எதிராக நுகர்வோர், சார்பு அமைப்புகள் சார்பில் 38,000 வழக்குகள் தொடர்ந்தன.
இதனையடுத்து அமெரிக்கா மற்றும் கனடாவில் டால்கம் பவுடர் தேவை வீழ்ச்சியடைந்து விற்பனையை நிறுத்தியது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அண்மையில் அறிவிப்பு வெளியாகியது.
உரிமம் ரத்து:
ஐஎஸ் 5339-2004 தர நிர்ணயத்திற்கு உட்பட்டு ஜான்சன் பவுடர் இல்லை. ஆய்வக சோதனையின் போது குழந்தைகளுக்கான பவுடர் மாதிரிகள் நிலையான pH மதிப்புக்கு ஒத்துபோகவில்லை. ஜான்சன் நிறுவனத்தின் குழந்தை பவுடர், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோலை பாதிக்கலாம் என்று கட்டுப்பாட்டாளர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் தயாரிப்புக்கான உரிமத்தை இன்று(செப்., 17) மகாராஷ்டிரா அரசு ரத்து செய்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்தின் உறுதியான அறிக்கையின் முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement