அதர்வாதான் எங்கள் பலமே – புகழாரம் சூட்டிய இயக்குநர்

டார்லிங், கூர்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு உள்ளிட்ட படங்கள் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்தவர் சாம் ஆண்டன். இவர் தற்போது அதர்வாவை வைத்து ட்ரிகர் என்ற படத்ஹ்டை இயக்கியிருக்கிறார். ட்ரிகர் திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். அருண் பாண்டியன், சீதா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் மற்றும் இன்னும் பல முக்கிய நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். திலீப் சுப்பராயன் ஆக்‌ஷன் கோரியோகிராஃபராக பணியாற்ற, ராஜேஷ் கலை இயக்கம் செய்துள்ளார். படமானது செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழுவினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் அதர்வா, “ ட்ரிகர், நானும் சாம் ஆண்டனும் இணையும் இரண்டாவது படம். நல்ல கதைக்கரு உடைய திரைப்படம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஆக்‌ஷனை தாண்டி படம் உணர்வுப்பூர்வமான பல விஷயங்களை இப்படம் கொண்டுள்ளது. தயாரிப்பாளர் ஷ்ருதி ஒரு தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி கிரியேட்டிவ்வாக படத்தில் பணிபுரிந்தார். சாம் ஆண்டன் பதற்றமில்லாமல், சாதாரணமாக படத்தை கையாள்வார். அவர் நிச்சயமாக பெரிய இடத்திற்கு செல்வார். 

அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் இருவருடைய நடிப்பும்  அபாரமாக இருந்தது. சின்னி ஜெயந்த் சாரை அப்பாவுடன் ஷூட்டிங் செல்லும்போது பார்த்துள்ளேன். அப்போது போல் இப்போதும் இளமையாக இருக்கிறார். ஒரு நல்ல படத்தை உருவாக்கிய சந்தோஷம் எங்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தை குடும்பத்தோடு வந்து அனைவரும் பாருங்கள், இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

அவரைத் தொடர்ந்து இயக்குநர் சாம் ஆண்டன் பேசுகையில், “ “என்னுடைய அனைத்து படங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்களுக்கு நன்றி. எந்த வித பதற்றமும் இல்லாமல் இந்த படத்தை முடித்ததற்கு காரணம் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்புதான். அவர்களுடைய ஒத்துழைப்பு அபாரமானது. 

Atharva, Sam Anton

அதர்வாவிடம் இந்த கதையை கூறிய போது, அவர் மீண்டும் போலீஸ் கதை என்று யோசிக்காமல், கதையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து ஒத்துக்கொண்டார். அதர்வாவின் கடின உழைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். தன்யா அர்பணிப்புடன் மிக நன்றாக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லருக்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.

இவர்கள் இருவரை அடுத்து பேசிய நடிகர் அருண் பாண்டியன், “ நான் நீண்ட வருடங்களுக்கு பிறகு என் மகளுடன் ஒரு படம் நடித்தேன் அதை இயக்குநர் சாம் ஆண்டன் பார்த்துவிட்டு என்னை பார்க்க வந்தார். நல்ல கதையை தேர்ந்தெடுக்கலாம் என்று நான் யோசித்த போதுதான் இந்த கதை வந்தது. இந்த டீமுடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிக  மகிழ்ச்சியாக இருந்தது.

Arun Pandiyan

இந்த படம் கண்டிப்பாக சுவாரஸ்யமான படமாக இருக்கும். சாம் ஆண்டன் மிக அழகாக படத்தை இயக்கியுள்ளார். என் நண்பர் சின்னி ஜெயந்துடன் மீண்டும் நடித்தது மகிழ்ச்சி. அதர்வா மிக திறமையான நடிகர் மிக கடின உழைப்பை தந்துள்ளார் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.