நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேற்கு நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேரை காணவில்லை என்றும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்கு நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (செப் 17) நிலச்சரிவு காரணமாக மேற்கு நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காணாமல் போனதாகவும் துணைத் தலைமை மாவட்ட அதிகாரி திபேஷ் ரிஜால் தெரிவித்தார்.
மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிலச்சரிவையடுத்து, உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 450 கி.மீ. தொலைவில் உள்ள அக்செம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த நிலையில் 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சுர்கெட் மாவட்டத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அச்சம் போலீசார் தரப்பில், “நிலச்சரிவுகளில் சிக்கியவர்களின் உடல்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். 11 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ராணுவத்தினரும் இணைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு மருத்துமவமனையில் 3 பேரின் உடல் நிலை கவலைக் கிடமாக உள்ளதால் அவர்களை விமானம் மூலம் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.