வட சென்னையின் முக்கிய பிரமுகர்களின் ஐட்ரீம் மூர்த்தியும் ஒருவர். 54 வயதாகும் ஐட்ரீம் மூர்த்தி பாரம்பரியமாகவே கோடீஸ்வரர். தியேட்டர், சினிமா தயாரிப்பு, ரியல்எஸ்டேட் என பல தொழில்களை செய்து வருகிறார். கடந்த 2021 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக நின்ற ஐட்ரீம் மூர்த்தி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். முன்னதாக தேர்தல் ஆணையத்தில் ஐட்ரீம் மூர்த்தி தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி அவரது மொத்த அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு ரூ.112.2 கோடி.
இதில் ரூ.20.8 கோடி அசையும் சொத்துகளும், ரூ.91.4 கோடி அசையா சொத்துகளும் அடங்கும். அவரது மொத்த அறிவிக்கப்பட்ட வருமானம் ரூ 49.5 லட்சம். இதில் ரூ 19.4 லட்சம் சுய வருமானம். மொத்த கடன்கள் 26.8 கோடி ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் மீது எந்த குற்றப்பின்னணியும் இல்லை. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ஐட்ரீம் மூர்த்திக்கு இவ்வளவு சொத்துக்களா என கேட்டால் அவர் பாரம்பரியமான பணக்காரர் என கூறும்போது ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. எம்எல்ஏ ஆகுவதற்கு முன்பே பணக்காரரான ஐட்ரீம் மூர்த்தி அண்மையில் புதிய வீடு கட்டியுள்ளார்.
ஈசிஆர் போன்ற விசாலமான இடங்களில் கட்டப்படும் வீடுகளின் வடிவைப்பில் அந்த வீடு மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. வட சென்னையின் குடிசை வாசிகளுக்கு மத்தியில் இந்த வீடு அப்பகுதியில் லேண்ட் மார்க் என்றும் சொல்லலாம். இதுகுறித்து ராயபுரம் வாக்காளர்கள் சிலரிடம் பேசியபோது, ” உண்மைதான்… ஐட்ரீம் மூர்த்தி ஏற்கனவே அந்த வீட்டை கட்டிக்கொண்டிருந்தார்… அவர் ஏற்கனவே பணக்காரர்… அதனால், வீடு கட்ட பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்கலாம் முடியாது… ஆனால், வெற்றி பெற்ற பின்னர் கொஞ்சம் தொகுதி பக்கமும் வந்தா நல்லா இருக்கும்.. எனக்கு தெரிந்து அவரை நான் தொகுதிக்குள் பார்த்ததில்லை…” என ராயபுரம் வாக்காளர்கள் சிலர் பேசினர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டவர்களின் விவரங்களாவன; மூர்த்தி ஆர் ஐட்ரீம் (திமுக), ஜெயக்குமார் டி (அதிமுக), கமலி எஸ் (என்டிகே), குமார் எஸ் (பிஎஸ்பி), குணசேகரன் எஸ் (எம்என்எம்), மோகன் ஏ (டிஎஸ்பிஏ), ராமஜெயம் சி (AMMK), ஜேம்ஸ் மார்ட்டின் எம் (TNIK), கருணாகரன் H (IND), கார்த்திக் V (IND), காளிதாஸ் K R (IND), கோகுல் G (IND), சதீஷ் S (IND), சுகந்தன் T (IND), சுந்தரபாண்டியன் R (IND), சுப்ரமணி S N (IND), செல்லப்பன் T (IND), செல்வகுமார் J (IND), தனசேகரன் G (IND), தினகரன் S (IND), பிரசாத் K (IND), பிரபாகரன் V (IND), பிரபு D ( IND), மூர்த்தி T C S (IND), விந்தன் A (IND), வேலு G (IND)