தென்காசி: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை தற்போது களமிறங்கி உள்ளது.
சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான
வீடியோக்கள்;இணையம் முழுக்க பரவி வருகிறது.
பள்ளி மாணவ, மாணவியர் மிட்டாய் கடை ஒன்றில் தின்பண்டம் வாங்க சென்ற போது இந்த அவமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்.
தென்காசி
கடைக்காரர் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியரிடம்.. உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. உங்களுக்கு எதுவும் கொடுக்க கூடாது என்று கட்டுப்பாடு போட்டுள்ளனர். ஊர் கட்டுப்பாடு படி, உங்களுக்கு எதுவும் தர முடியாது. எதிரே இருக்கும் கடையிலும் சொல்லி இருக்கிறேன். அவரும் உங்களுக்கு கொடுக்க மாட்டார். நீங்கள் போய் உங்கள் வீட்டிலும் சொல்லுங்கள் கொடுக்க மாட்டோம் என்று.
ஊர் கட்டுப்பாடு
இது ஊர் கட்டுப்பாடு என்று உங்கள் வீட்டில் சொல்லுங்கள் என்று சிறு குழந்தைகளிடம் அந்த கடைக்காரர் சொல்லிஇருக்கிறார். பிஞ்சு குழந்தைகளிடம் அவர் இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த நிலையில்தான் வீடியோ சர்ச்சையான நிலையில், உடனே அங்கு போலீசார் சென்று சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர். முருகன், குமார், சுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏராளமான போலீசார் அதேபோல் கடையை நடத்தி வந்த மகேஸ்வரனை கைது செய்தனர்.
ஜாதி
மேலும் 20 வயதுடைய ராமச்சந்திரன் என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர்தான் அங்கே இந்த கட்டுப்பாட்டை விதிக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதில்தான் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் தலையிட்டுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷின் உத்தரவின் பெயரில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் இங்கே உடனே ஆய்வு செய்தனர். அங்கு பள்ளிக்கு உள்ளேயும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அங்கே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நடவடிக்கை
அப்போது மாணவர்கள்.. எங்களை தெருவுல நடக்க விடல.. ஸ்கூல்லயும் தனியாக உட்கார வச்சு இருக்காங்க.. ஸ்கூல்ல மத்த சாதி ஆட்கள் எங்களை மோசமா நடத்துறாங்க என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த பள்ளி நிர்வாகிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அந்த கடைக்காரர் கடந்த சில நாட்களாவே அந்த ஊரில் உள்ள ஆதி திராவிட பிரிவை சேர்ந்த பெரியவர்களுக்கும் பொருட்களை கொடுக்க மாட்டேன் என்று கூறி தீண்டாமையை கடைபிடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.