தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சிறுவர்களுக்கு கடையில் தின்பண்டம் தரமாட்டோம் என்றும் ஊர் கட்டுப்பாடுள்ளது என்றும் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரமூர்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமம் பஞ்சாகுளம் இந்த கிராமத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த இளைஞர்களை மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஜாதி ரீதியாக திட்டியதால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்தே ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பெண்களையும் குழந்தைகளையும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கேலி பேசுவதும், கிண்டல் அடிப்பதுமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முன்னர் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பள்ளி குழந்தைகளுக்கு கடையில் தின்பண்டங்கள் தர முடியாது என்றும் ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் மகேஸ்வரன் சமுதாய குழுவில் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் இந்த வீடியோவானது நேற்று இரவு வைரலானதை தொடர்ந்து மகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மகேஷின் நண்பரான ராமச்சந்திரமூர்த்தி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவுப்படி கோட்டாச்சியர் சுப்புலட்சுமி முன்னிலையில் வட்டாச்சியர் பாபு சம்பந்தப்பட்டை கடைக்கும் சீல் வைத்து பூட்டினார்.