பிரதமர் மோடி பிறந்தநாள் பரிசு.. பெட்ரோல் லிட்டர் ரூ.51-க்கு விற்பனை!

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜக சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள ஆர்.பி அரசு ஏஜென்சி என்ற தனியார் எரிபொருள் நிலையத்தில் இன்று காலை முதலே பெட்ரோல் லிட்டர் ரூ.51-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் வழங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார் அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் விஜயராகவன்.

இந்த அதிரடி ஆஃபரால் வீடுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட கேன்களிலும் பலர் பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த சூழலில் பெட்ரோல் லிட்டருக்கு 51 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மன்னார்குடியில் கண்தான விழிப்புணர்வு மினி மாரத்தான்!

இது குறித்து விசாரித்தபோது ஆர்.பி. அரசு பெட்ரோல் பங்கின் உரிமையாளர் விஜயராகவன் என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக வலங்கைமானில் பெட்ரோல் பங்க்(petrol bunk) நடத்தி வருகிறார். இவர் பாஜகவில் பல ஆண்டுகளாக ஒரு அடிப்படை உறுப்பினராகவே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் மீது அளவற்ற அன்பு கொண்டவரான விஜயராகவன், இன்று பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு பாதி விலையில் பெட்ரோல் வழங்குவதோடு இம்மாதம் முழுவதும் விவசாயிகளுக்கு டீசல் ஒரு ரூபாய் குறைத்து வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.