திருச்செந்தூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கால் காலவிரயம் காட்டும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் பொன் இசக்கி தெரிவித்தார். நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு அனுமதிக்காமல் அலைகழித்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வலியில் அனுமதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்த பெண்ணிற்கு இன்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான செய்திகள் வெளியானது.
அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் பொன் இசக்கி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கால் காலவிரயம் காட்டும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உமரிக்காடு பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் துர்கா என்பவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் வந்த நிலையில், அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அந்த கர்ப்பிணி பெண் துர்காவை திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ஸ்கேன் எடுத்து வருமாறு பிரசவ வலியிலும் அலைகளித்துள்ளனர்.
மேலும், உடனே இன்னும் ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூறிய செவலியர்கள், ஆனால் அலட்சியத்துடன் நடந்துக் கொண்டதுடன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறும் கூறியுள்ளனர். இக்கட்டான அந்த பிரசவ வலியிலும் 108 ஆம்புலன்ஸ் உதவியும் கிடைக்காத நிலையில் கர்ப்பிணி பெண் துர்கா அலைகழிக்கப்பட்டுள்ளார்.
கர்ப்பிணியை, அவரது தாயார் வள்ளி, நடக்க வைத்தே, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளார். 21 வயதான கர்ப்பிணி பெண் துர்காவுக்கு இன்று பிற்பகல் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இந்த கர்ப்பிணி பெண்ணிற்கு நடந்த சம்பவம் குறித்து பாதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணின் தாயாரிடம் தூத்துக்குடி மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் பொன் இசக்கி இது குறித்து கேட்டறிந்தார். மேலும் இன்று கர்ப்பிணி பெண் துர்காவிற்கு பிறந்த ஆண் குழந்தையை பார்த்த அவர், தாய் – சேய் உடல் நலன் குறித்து மருத்துவர் நித்தியாவிடம் கேட்டறிந்தார்.