வாடகை பாக்கி கொடுக்காத கடைகளுக்கு ‘சீல்’! எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தது சென்னை மாநகராட்சி….

சென்னை: மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகைக்கு இருக்கும் வியாபாரிகளில், வாடகை பாக்கி செலுத்தாத சுமார்  400 கடைகளுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளது. இது வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக மாநகரில் 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை, மாத வாடகை அடிப்படையில் வியாபாரிகளுக்கு விட்டு வாடகை வசூலித்து வருகின்றனர். மாநகராட்சிக்கு சொந்தமா கடைகள், நிறுவனங்கள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் வரை வருமானம் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், பல கடைகளின் வியாபாரிகள், வாடகை பாக்கியை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, வாடகை பாக்கி உள்ள கடைகளை கண்டறிந்து, அவற்றை சீல் வைக்க மாநகராட்சி முடிவு செய்து, அதற்கான எச்சரிக்கை நோட்டீசை கடைகளில் ஒட்டியுள்ளது.

அதன்படி,  “சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள பல கடைகளில்,  உள்ளாட்சி பிரதிநிதிகள் , உள்ளூர் அரசியல்வாதிகள் செல்வாக்குடன் பலர் வாடகையை செலுத்தாமல் இருப்பதாகவும், அதுபோன்ற கடைகளை கண்டறிந்து, வாடகையை வசூலிக்க மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், முற்கட்டகமாக வாடகை செலுத்தாமல் இருந்த 400-க்கும் மேற்பட்ட கடைகள் சமீபத்தில் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, ஒன்றரை கோடி ரூபாய் வாடகை பாக்கி  வசூலாகி இருப்பதாகவும்,  வாடகை பாக்கி செலுத்தாத மேலும், 400 கடைகள் குறித்த பட்டியலை தயாரித்து உள்ளோம். இந்த கடைகளுக்கு, ஓரிரு வாரங்களில் முழுமையாக செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தவிட்டால், அக்கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.