வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காசர்கோடு :கேரளாவில், தெரு நாய்களிடம் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகளை காக்க, ‘ஏர் – கன்’ என்ற துப்பாக்கி எடுத்துச் சென்றவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில், காசர்கோடு மாவட்டம் பேக்கல் என்ற ஊரில் வசிக்கும் சமீர் என்பவர் ஏர் – கன் ஏந்தியபடி மாணவ – மாணவியரை பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
இதை சிலர் ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.அந்த வீடியோவில் சமீர், ‘ஏர் – கன் வாயிலாக சுட்டால் நாய்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே, பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இதை பயன்படுத்துகிறேன்’ எனக் கூறியிருந்தார்.ஆனால், பொதுவெளியில் துப்பாக்கியை எடுத்துச் சென்ற குற்றத்துக்காக சமீர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆக., முதல் இதுவரையிலும், கேரளாவில் தெருநாய் கடித்து சிறுவர் – சிறுமியர் உட்பட 10 பேர் உயிரிழந்து உள்ளனர். செப்., 20 முதல் அக்., 20 வரை தெரு நாய்களுக்கு தொற்று நோய் தடுப்பூசி செலுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement