வெறும் கையை காட்டுனதுக்கு 6 கோடி வருமானம்.. சொத்து மதிப்பு 700 கோடி..!

டிக்டாக் வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டும் அல்லாமல் மிகப்பெரிய வர்த்தகத் தளமாக மாறியுள்ளது, இது இந்தியாவில் தடை செய்யப்பட்டது லாபமா.. நஷ்டமா.. என்பதைத் தாண்டி இதன் மூலம் பலன் அடைந்தவர்கள் ஏராளம்..

இதில் மிகவும் முக்கியமானவர் Khaby Lame..!!

தீபாவளி: மதுபான விற்பனை அமோகமாக இருக்கப் போகிறது..!

டிக்டாக்

டிக்டாக்

சீன நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் முக்கியப் பொழுதுபோக்குச் செயலியாக இருக்கும் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் உலகில் பல நாடுகளில் இன்னும் கொடிகட்டிப் பறந்து வருகிறது என்றால் மிகையில்லை.

ஸ்டார் Khaby Lame

ஸ்டார் Khaby Lame

டிக்டாக் மூலம் வாழ்ந்தவர்களும் உண்டு, அதேபோல் வாழ்க்கையில் ப்ரைவசியைத் தொலைத்துவிட்டுத் தேடி வருபவர்களும் ஏராளம். ஆனால் Khaby Lame என்பவர் டிக்டாக் வாயிலாக மட்டுமே மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளார்.

டிக்டாக் வீடியோ

டிக்டாக் வீடியோ

கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஒருவர் தான் இந்த Khaby Lame, தினசரி சம்பளத்தில் ஹோட்டல், வீட்டுகளில் வேலை செய்து வந்தவர், வேலை இழந்த விரக்தியில் டிக்டாக் செய்யத் துவங்கி உலகம் முழுவதும் பிரபலமானார்.

150 மில்லியன் பாலோவர்கள்
 

150 மில்லியன் பாலோவர்கள்

இன்று டிக்டாக் தளத்தில் உலகளவில் அதிகப் பாலோவர்களைக் கொண்டு உள்ளது Khaby Lame தான். இவரது டிக்டாக் கணக்கை சுமார் 150 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர். இந்தப் பிரபலத்தையும், டிக்டாக்-ஐயும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெற்றவர்களில் Khaby Lame மிகவும் முக்கியமானவர்.

influencer ஆதிக்கம்

influencer ஆதிக்கம்

உலகம் முழுவதும் இணையம் பெரிய அளவில் வர்த்தகச் சந்தையை ஆட்சி செய்வதால், இன்று சமுக வலைத்தளத்தில் influencer ஆதிக்கம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளது. உதாரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி கிரிக்கெட் போட்டிகளைக் காட்டிலும் விளம்பரத்தில் அதிகளவிலான வருமானத்தைப் பெறுவது போல…

மேனேஜர், அலுவலகம்

மேனேஜர், அலுவலகம்

இணையத்தில் பிரபலமானவர்கள் தான் தற்போது நிறுவனங்களின் முக்கிய டாக்கெட் ஆக மாறியுள்ளனர். இப்படியிருக்கையில் 150 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட Khaby Lame சும்மா இருப்பரா.. சரியான வழிகாட்டுதல் உடன் பிரபலமான உடனேயே தனக்கென மேனேஜர், அலுவலகம் எனச் செட்டப் செய்துள்ளார்.

6 கோடி ரூபாய்

6 கோடி ரூபாய்

இன்று டிக்டாக், இன்ஸ்டா தளத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு 750000 டாலர் வாங்குகிறார், அதாவது கிட்டதட்ட 6 கோடி ரூபாய். இதுமட்டும் அல்லாமல் இந்த வருட இறுதிக்குள் 10 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு அளவை எட்ட உள்ளார் Khaby Lame. இவருடைய வளர்ச்சி பலருக்கும் வியப்பு அளிக்கிறது.

ஹாலிவுட் கனவு

ஹாலிவுட் கனவு

ஆனால் Khaby Lame தான் ஒரு ஹாலிவுட்-ல் காமெடியன் ஆக நடிக்க வேண்டும் என ஆசைக் கொண்டு உள்ளார், இதற்காகப் பல ஆங்கிலம் கற்பது முதல் தனது நடை, உடை என அனைத்தையும் மாற்றி வருகிறார் Khaby Lame. ஒரு சாதாரண வேலையைச் செய்து வந்த Khaby Lame இன்று 700 கோடி ரூபாய் சொத்து மதிப்பை எட்ட உள்ளார்.

Iron Corporation நிறுவனம்

Iron Corporation நிறுவனம்

இது மட்டும் அல்லாமல் Khaby Lame தன்னைப் போவே இருக்கும் பிற விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், சமுகவலைதள influencer-களை இணைக்கும் Iron Corporation என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் பல பெரிய பிராண்டுகள் உடன் நேரடி தொடர்பில் இருப்பது மட்டும் அல்லாமல் வர்த்தகம் செய்து வருகிறார்.

திடீர் பணக்காரர்கள்

திடீர் பணக்காரர்கள்

பொவாகவே திடீர் பணக்காரர்கள் எப்போதும் பணம் வந்துவிட்டால் கார், கப்பல், ஆடம்பரத்தின் உச்சத்திற்குச் சென்று அதிகளவிலான பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். ஆனால் Khaby Lame சற்று வித்தியாசமானவர் ரியல் எஸ்டேட்-ல் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்.

உணவகம்

உணவகம்

இதுமட்டும் அல்லாமல் உணவகம் நடத்தி வருகிறார், சில மென்பொருள் நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார். ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையில் இருந்து வந்த காரணத்தால் என்னவோ மிகவும் பொறுப்புடனும், எதிர்காலத்தின் மீதான பயத்துடனும் நிதானமாகச் செயல்படுகிறார். 2020 பிற்பகுதியில் இருந்து 2022க்குள் இவருடைய வாழ்க்கையை டிக்டாக் வீடியோக்கள் தலைகீழாக மாற்றியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TikTok Star Khaby Lame make $750000 per post; track to make $10 million this year with 150 million followers

TikTok Star Khaby Lame make $750000 per post; track to make $10 million this year with 150 million followers

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.