வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி, :கிழக்கு லடாக்கின் சில பகுதிகளுக்குள் நம் அண்டை நாடான சீனா அத்துமீறி நுழைந்து முகாமிட்டது. இதையடுத்து, 2020 மே மாதத்தில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன.
படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக,கடந்த, ஜூலை, 17ல் ராணுவ படைத் தளபதிகள் நிலையிலான, 16வது சுற்று பேச்சு நடந்தது. இதில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.இதன்படி, கிழக்கு லடாக்கின் கோக்ரா – ஹாட் ஸ்பிரிங் பகுதியில் இருந்து சமீபத்தில் சீன ராணுவம் தன் படைகளை திரும்பப் பெற்றது. இந்த நான்கு நாள் பணி, கடந்த, 12ம் தேதி முடிவுக்கு வந்தது.
நம் படைகளும் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.இந்நிலையில், அந்தப் பகுதியில், கடந்த, ஆக., 12 மற்றும் கடந்த, 15ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.அந்த இடத்தில், சீன ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது மற்றும் தற்காலிக கட்டடங்கள் இருப்பது முதல் படத்தில் உள்ளது. இரண்டாவது படத்தில் அந்த இடத்தில் இருந்து சீனப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதுடன், கட்டடங்களும் இடிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement