பெங்களூரு : மத்திய குற்றப்பிரிவு போதை தடுப்பு பிரிவினர், போதை கடத்தல் நபரிடம் இருந்த 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் போதைப் பொருள் பயன்படுத்தும் இளம் சமுதாயத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, போலீசார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, போதைப் பொருட்களை கடத்தியவர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜூலையில், பெங்களூரை சேர்ந்த மிருதுஞ்செயா, 45, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, போதைப் பொருளுக்கான ‘எண்ணெய்’ பறிமுதல் செய்தனர். அவர் மீது பெங்களூரு உட்பட பல இடங்களில் போதை தடுப்பு பிரிவில் கீழ் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் விற்பனை மூலம், மனைவி பெயரில் சொத்துகள், கமர்ஷியல் காம்பிளக்ஸ், விவசாய நிலம் வாங்கியுள்ளார். அத்துடன், பல்வேறு வங்கிகளில், தனது பெயரிலும், மனைவி பெயரிலும், 5 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.இந்நிலையில், மிருதுஞ்செயாவின் 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement