திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் வார விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 425 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 32 ஆயிரத்து 693 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.
மேலும், ரூ.4.86 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் வளாகத்தில் உள்ள 31 அறைகளும் பக்தர்களால் நிரம்பியிருந்தது. பக்தர்கள் சுமார் 24 மணிநேரம்(ஒருநாள்) காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.