பெங்களூரு : பெங்களூரில் மீண்டும் ‘டோயிங்’ முறை கொண்டு வரப்படாது, என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறினார்.பெங்களூரில் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் ‘டோயிங்’ வாகனம் மூலம் எடுத்து சென்று அபராதம் வசூலித்தனர். ஆனால் ‘டோயிங்’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து பெங்களூரில் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் மீண்டும் இந்த நடைமுறை கொண்டு வர ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாயின.இது குறித்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா வெளியிட்ட அறிக்கை:பெங்களூரில் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து ‘டோயிங்’ முறை தடை செய்யப்பட்டது. மீண்டும் இதை கொண்டு வருவது குறித்த எந்த முடிவும் அரசிடம் இல்லை. பெங்களூரில் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில், பார்க்கிங் முறையை கொண்டு வருவது குறித்து நிபுணர்களின் ஆலோசனை பெற்று, ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். ஆனால், எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement