இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போகும் சோனியா அகர்வால்?

சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சோனியா அகர்வால். தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  சோனியா அகர்வால், இயக்குனரும் நடிகருமான செல்வராகவனை காதலித்து அவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.  தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு முழுவதுமாக ஒதுங்கிவிட்டார், பின்னர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக செல்வராகவனும், சோனியா அகர்வாலும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.  தற்போது செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

அதன்பின்னர் நடிகை சோனியா அகர்வால் சின்னத்திரை பக்கம் தடம் பாதிக்க தொடங்கினார், சில சீரியல்களில் நடித்து வந்தார்.  தற்போது இவர் மீண்டும் வெள்ளித்திரை பக்கம் திரும்பியுள்ளார். தமிழ் மற்றும்  சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.  இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஒரு புகைப்படம் இவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்கிற சந்தேகத்தை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது.  நடிகை சோனியா அகர்வால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார், அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தனது குடும்பத்தினருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடுமுறை தின கொண்டாட்ட புகைப்படங்கள் என அடிக்கடி பல புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். 

sonia

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் மெஹந்தி போட்டுகொண்டு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் சோனியாவிடம் நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  அதற்கு பதிலளித்தவர், ‘என்னுடைய திருமணத்திற்கு நான் இவ்வளவு சிறிய அளவில் மெஹந்தி வைத்துக்கொள்ளமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.