கொப்பால் : ”கர்நாடகாவில், குழந்தை கடத்தல்காரர்கள் நுழைந்துள்ளதாக, பொய்யான வதந்தி பரவியுள்ளது. இதை யாரும் நம்பக்கூடாது,” என கொப்பால் மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.கர்நாடகாவில், பல்வேறு நகரங்களில் குழந்தை திருடர்கள் வந்துள்ளதாக, கொப்பாலில் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்தனர்.
சமீபத்தில் பள்ளி சிறார்களுக்கு, பிஸ்கட் கொடுத்த வாலிபரை குழந்தை திருடன் என, தவறாக நினைத்து அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் நடந்தது.இது குறித்து, கொப்பால் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அருணன் கிசூ கிரி வெளியிட்ட அறிக்கை:மாநிலத்தில், குழந்தை திருடர்கள் வந்துள்ளதாக, மாவட்டத்தில் வதந்திபரவியுள்ளது. இது பொய்யானது. பொது மக்கள் நம்ப வேண்டாம். தங்களின் கிராமத்துக்கு வரும், அறிமுகமில்லாத நபர்களை கண்டு, சந்தேகித்து தாக்கக்கூடாது.ஒருவேளை சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாடுவதை கண்டால், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.சந்தேகத்திற்கிடமான நபர்களை தாக்குவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.’வாட்ஸ் ஆப்’, முகநுால் போன்ற, வலை தளங்களில் வரும் பொய்யான செய்திகளை நம்பக்கூடாது. இதை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இது போன்று செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement