மாண்டியா : ”அகங்காரம், குண்டர் செயல்பாடு, அடக்கு முறையை கையாள்வதை தவிர, ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,க்களுக்கு வேறு எதுவும் தெரியாது,” என மாண்டியா சுயேட்சை எம்.பி., சுமலதா அம்பரிஷ் சாடினார்.மாண்டியாவில், நேற்று அவர் கூறியதாவது:மாண்டியா மக்களின் ஒரு பிரச்னை பற்றியும், ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதில்லை. என்னை குறி வைத்து பேசுவதற்காக, இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தனரா? ஆய்வு கூட்டம் பற்றி, எனக்கு தகவல் தெரிவிக்காமல் நடத்தினர்.
இது தொடர்பாக, நான் கேள்வி எழுப்பினேனா.நான் திருட்டுத்தனமாக கூட்டம் நடத்தவில்லை. ஒரு முறை கூட்டத்தில் அனைவரும் இருந்தனர். சட்டவிரோத சுரங்கத்தொழில் குறித்து குரல் எழுப்பிய போது, பேசவே விடவில்லை. கூச்சல், கூப்பாடு போட்டனர்.கூட்டத்தை அரசியல் மேடை போன்று பார்க்கின்றனர். மக்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசித்து, தீர்வு காண முயற்சிப்பதில்லை. சட்டசபை கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்ட பிரச்னைகள் பற்றி, யாராவது விவாதித்தனரா. பார்லிமென்டில் நான் பேசினேன். இவர்கள் அரசியல் செய்கின்றனரே தவிர, மக்களின் பிரச்னைகள் பற்றி ஆலோசிப்பதில்லை.அகங்காரம், குண்டர் செயல்பாடு, அடக்கு முறையை கையாள்வதை தவிர, ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,க்களுக்கு வேறு எதுவும் தெரியாது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement