தென்காசி தீண்டாமை விவகாரம்: எஸ்.சி. எஸ்.டி. சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த முடிவு

தென்காசி:
தென்காசி தீண்டாமை விவகாரம்: எஸ்.சி எஸ்.டி. சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க் தெரிவிக்கையில், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமை விவகாரத்தில் எஸ்.சி, எஸ்டி சட்டத்தின் கீழ் முக்கிய பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்களை புரியும் குற்றவாளிகளை சில காலங்களுக்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்ற கூடிய சட்ட பிரிவு (Externment provision) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சமூக ஒடுக்குமுறையை தடுக்கவும், தொடர்ந்து பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அச்சட்டப்பிரிவை இவ்வழக்கில் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.