'எம்.ஜி.ஆர் உயில் படி அதிமுக யாருக்கு சொந்தம்?' மாஜி எம்.எல்.ஏ செளந்தர்ராஜன் பகீர் தகவல்!

அக்டோபர் 17ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக எம்.ஜி.ஆருடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர்ராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சௌந்தர்ராஜன்: “இந்த கட்சி ஆரம்பிப்பதற்கு முதல் காரணம் நாட்டில் எங்கே பார்த்தாலும் அச்சம் நிலவுகிறது. என்ன பரிகாரம் என்பது குறித்து தேடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி தேடுபவர்களுக்கு இந்த இயக்கம் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த இயக்கத்தை நாங்கள் துவங்கி உள்ளோம்.

இந்த கட்சியின் நோக்கம் எதிர்காலத்தில் லஞ்சமும், ஊழலும் அற்ற அரசு உருவாக வேண்டும், மதுவிலக்கு ரத்து செய்தால் தவிர இந்த நாட்டில் உள்ள இளைஞர்களை காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு குடும்பங்கள் செயல்படாமல் இருக்கிறது அவைகளை மாற்றி அமைக்க வேண்டும் இது எங்களது பிரதான கொள்கை.

கல்வி எந்த அளவில் இருந்தாலும் சரி மருத்துவமாக, பொறியியலாக இருந்தாலும் முழுவதும் தகுதி உள்ளவர்களுக்கு அரசாங்கமே இலவசமாக கல்வி கொடுக்க வேண்டும். தனியாருக்கு கொடுத்துவிட்டு அவர்கள் கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்ததை நீக்கி அதனை பொதுவுடமையாக்கி படிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை தட்டி கழித்தால் அரசியல் நடப்பதற்கு தகுதி இல்லை.

கடைசியாக எம்ஜிஆர் உயில் எழுதும் போது இந்த கட்சியை நம்பிக்கை வைத்து எழுதவில்லை. கட்சி சரியா நடத்த முடியவில்லை என்றால் இந்த சொத்துக்களை எல்லாவற்றின் வருவாயை வாய்பேச முடியாத, காது கேட்காத(மாற்றுத்திறனாளி) பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதினார். இதை எழுதியதற்கு காரணம் கட்சி இருக்கும் என்று நம்பிக்கை அவருக்கு இல்லை.

இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்கினார். வயதுக்கு மீறிய அதிகாரத்தை கொடுத்தது நான் வாழ்க்கையில் செய்தது மிகப்பெரிய தவறு எனவே யாரும் அந்த அம்மையாரோடு எந்தவிதமான தொடர்பும் கூடாது என தெரிவித்தார்.

ஆனால் சிலர் பதவிக்காக அந்த அம்மையாரை வைத்துக் கொண்டால் தான் பதவி சுகம் காணலாம் என்று உருவாக்கினார்கள். அதிமுககாரன் கையில் அண்ணா படம் இல்லை, எம்.ஜி.ஆர் படமும் இல்லை, இந்த அம்மையார் படம் மட்டும் தான் உள்ளது. அவர்களுக்கு அண்ணாவையும் தெரியாது. எம்ஜிஆரையும் தெரியாது.அதிமுகவை விட்டு வெளியே வந்த பின்னர் நாங்கள் அதிமுகவை ஒரு இயக்கமாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஒரு கொள்ளை கூட்டமாக தான் இருக்கின்றது.

திமுகவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கேள்விக்கு திமுகவும், அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான் இதில் எந்தவிதமான வித்தியாசமும் இருப்பதாக கருதவில்லை என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தென்காசி ரகுநாதன், ஒயிட் ரோஸ் காத்தான், முருகானந்தம், சங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.