டெல்லி: வங்கிகளில் உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவர்களை வங்கிகள் கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக பலரும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கலாம். உதாரணத்திற்கு கடன் குறித்து விசாரணைகளுக்காக வங்கிகளுக்கு செல்லலாம். அப்போது அங்கு வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இருந்திருக்கலாம். இதனால் உங்கள் தரப்பு கோரிக்கையினை முழுமையாக தெரிவிக்க முடியாமல் போகலாம்.
இந்த பிரச்சனையை தீர்க்க மத்திய நிதியமைச்சர் ஒரு சூப்பரான பரிந்துரையை வங்கிகளுக்கு கொடுத்துள்ளார் எனலாம்.
1991-ல் பொருளாதார சீர்திருத்தங்கள் அரைகுறையானவை.. நிர்மலா சீதாராமன்!
உள்ளூர் மொழி தெரியணும்?
அது வங்கிகளில் உள்ளூர் மொழி தெரியாதவர்களை வங்கிகள் கட்டாயம் கண்டிப்பாக நியமிக்க கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரை செய்துள்ளார்.
மும்பையில் நடந்த வங்கிகளின் 75வது பொதுக்குழு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், வங்கிகளில் உள்ளூர் மொழிகளை பேசத் தெரிந்தவர்களையே கட்டாயம் நியமிக்க வேண்டும்.
வியாபாரத்திற்கு உதவாது?
வங்கிகள் கடனை கொடுத்து வியாபாரம் செய்கின்றன. ஆக வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப செயல்படுங்கள் இருக்க வேண்டும். வங்கிகளின் கிளை அலுவலகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், உள்ளூர் மொழி பேச தெரியாதவர்களை நியமித்து உங்களுக்கு ஹிந்தி பேசத் தெரியாதா, அப்போது நீ இந்தியன் இல்லை என்று தேசப்பற்றோடு சொல்வதெல்லாம் போதும்.
இது போன்று பேசுவது வங்கிகளின் வியாபாரத்திற்கு உதவாது.
யாரை பணியில் அமர்த்தனும்?
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. இங்கு இதுபோன்று உள்ளூர் மொழி பேசத்தெரிந்த ஊழியர்கள் பணியில் இருப்பது அவசியமான ஒன்று. அவர்களை பணிக்கு எடுப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒருவரை கிளைமட்ட அளவில் வங்கிகள் நியமிக்கும்போது அந்த பகுதி மக்களின் மொழியை பேசக்கூடியவரா என்பதை உறுதி செய்து அத பின்னரே நியமைக்க நியமிக்க வேண்டும் என பரிந்துரிய செய்துள்ளார்.
சேவை செய்ய தயார்?
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை நேர் மறையான எண்ணத்துடன் அணுக வேண்டும். நாங்கள் உங்களுக்கு சேவை செய்யத் தயாராக இருக்கிறோம் என நீங்கள் சொல்ல வேண்டும். எங்கு வேண்டுமானாலும் வியாபாரம் செய்ய தயாராக இருக்கிறோம் என்பதை வாடிக்கையாளர்களுக்கு சொல்லுங்கள். விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள்.
விழாக்கால பருவம்
விழாக்கால பருவம் தொடங்கவுள்ளது. நுகர்வுகள் அதிகரிக்கலாம். மக்கள் பயணம் செய்வதிலும், தங்குவதிலும் ஆர்வம் காட்டலாம். அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை கொடுக்கலாம். அதனை சரியான நேரத்தில் சரியான பொருட்களை கொண்டு சேர்ப்பது அவசியமானது என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
indian Banks must ensure their staff speaks local language in branches: nirlama sitharaman
indian Banks must ensure their staff speaks local language in branches: nirlama sitharaman/நிர்மலா சீதாராமன் கொடுத்த செம அப்டேட்.. வங்கிகளில் இந்த பிரச்சனையே இருக்காது?