தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியாததால் போலீஸாரால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.
ஈரானில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள இளம்பெண்ணின் மரணம் பல்வேறு கேள்விகளை அங்கு எழுப்பியுள்ளது.
ஈரானைச் சேர்ந்தவர் ஹமினி (22) என்ற இளம்பெண், தனது குடும்பத்தாருடன், குர்திஸ்தானிலிருந்து தலைநகர் தெஹ்ரானுக்கு வருகிறார். அங்கு அவர் ஈரான் அரசின் கீழ் விதிக்கப்பட்டிருந்த ஆடை கட்டுப்பாட்டை பின்பற்றவில்லை என்று அங்கிருந்த போலீஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.
பின்னர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் ஹமினி சேர்க்கப்படுகிறார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹமினி இறக்கிறார். மாரடைப்பால் ஹமினி இறந்துவிட்டதாக போலீஸார் கூறும் நிலையில்,போலீஸாரின் சித்தரவதையால்தான் தங்களது மகள் இறந்துவிட்டதாக ஹமினியின் பெற்றோர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் ஹமினியின் மரணம் ஈரானில் கலவரம் வெடிக்கக் காரணமாகியுள்ளது. ஹமினியின் சொந்த ஊரில் இளம்பெண்கள் பலரும் கூடி தங்களது ஹிஜாப்பை தூக்கி எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Women of Iran-Saghez removed their headscarves in protest against the murder of Mahsa Amini 22 Yr old woman by hijab police and chanting:
death to dictator!
Removing hijab is a punishable crime in Iran. We call on women and men around the world to show solidarity. #مهسا_امینی pic.twitter.com/ActEYqOr1Q
— Masih Alinejad (@AlinejadMasih) September 17, 2022
கலவரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் மீதும் இளைஞர்கள் மீதும் அடக்குமுறையை ஈரான் போலீஸார் கட்டவிழ்த்துள்ளனர்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்னர், ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரெய்சி, எல்லா நேரங்களிலும் ஹிஜாப் அணிவது உட்பட பெண்களின் ஆடைக் கட்டுப்பாட்டை கடுமையாக்கி உத்தரவிட்டனர். இந்த நிலையில் ஹமினியின் மரணம் ஈரான் அரசு பெண்கள் மீது நடத்தும் அடக்குமுறைகளுக்கு எதிராக கேள்வியை தீவிரப்படுத்தப்படுகிறது.