பணஜி: சோனாலி போகத் மரணம் குறித்து கோவாவில் தனியார் ஓட்டலில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சோனாலி போகத்:
ஹரியானாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகத், 42 பா.ஜ.,வின் முக்கிய பிரமுகரமான இவர், கடந்த மாதம் 22ல், கோவாவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். கோவா போலீசார் நடத்திய விசாரணையில், சோனாலியின் உதவியாளர்கள், அவருக்கு பானத்தில் எதையோ கலந்து குடிக்கக் கொடுத்தது தெரியவந்தது.
கைது:
இதையடுத்து சோனாலியின் உதவியாளர்கள் இருவர், விடுதி உரிமையாளர், போதைப் பொருள் கடத்தல்காரர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
சி.பி.ஐ. விசாரணை:
சோனாலி போகத் மரண வழக்கை கோவா போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இன்று சி.பி.ஐ., விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. விரைவில் விசாரணையை துவக்க உள்ளதாக, கடந்த செப்.,15ம் தேதி தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
தனியார் ஓட்டலில் சிபிஐ விசாரணை:
இந்நிலையில், இன்று சோனாலி போகத் மரணம் குறித்து கோவாவில் தனியார் ஓட்டலில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement