புரட்டாசி மாதம் பிறந்தது.! மீன், மட்டனுக்கு குட்பை; மார்க்கெட்டுக்கள் வெறிச்சோடியது

திருவள்ளூர்: புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ளதையொட்டி பெருமாள் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதற்காக பக்தர்கள் விரதம் கடைபிடிப்பதால் இந்த மாதம் முழுவதும் மீன், மட்டன், சிக்கன் உள்பட அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். இதனால் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்துவிட்டதால் விற்பனையும் பாதியாக குறைந்துவிட்டது. தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதம் இன்று துவங்கியது. இந்த மாதம் முழுவதும் மீன், சிக்கன், மட்டன் ஆகியவற்றை பெரும்பாலானவர்கள் சாப்பிட மாட்டார்கள். இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீன், சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். தங்களுக்கு பிடித்தமான நண்டு, இறால் வகைகளையும் கோழி, ஆடு வாத்து ஆகியவற்றை ஆர்வமாக வாங்கி செல்வார்கள். ஆனால் இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் வெறிச்சோடியது. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாத முதல் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தும் திருவள்ளூரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகள் மீன் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.‘’இன்னும் ஒரு மாதத்துக்கு மீன் மார்க்கெட்,  இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும்’’ என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.