பாஜகவை அகில இந்திய அளவில் தனிமை படுத்த வேண்டும்: தொல் திருமாவளவன்

மாவீரன் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் 77வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடமான உரிமை களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் தலைமையில் பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன்,  சனாதனத்தை வேரறுக்க போராடிய கருத்தியல் போராளி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் நினைவு நாளில் இந்தியாவை சூழ்ந்துள்ள சனாதனத்தை கோலாச்ச துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவை அகில இந்திய அளவில் தனிமை படுத்த வேண்டும். அவர்களோடு அரசியல் காரணங்களுக்காக கூட்டணி வைப்பது நாட்டு மக்களுக்கு செய்கின்ற துரோகம் என்றார். பாஜக ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட சனாதன சக்திகளை தனிமை படுத்துவது ஒன்றுதான் இந்தியாவையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க ஒரே வழி எனவும் கூறினார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகள் இடையே தீண்டாமையை கடைபிடித்த விகாரத்தில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றாலும் ஊர் கட்டுப்பாடு என்று முடிவு செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது எனவும் தொல் திருமாவளவன்  கூறினார்.

இந்துக்கள் குறித்து ஆராசா பேசியதாக திரித்து திரிபு வாதம் செய்கிறார்கள் அவர் யாரையும் குறிப்பிட்டு புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. மனுஸ்மிரிதியில் உள்ளதை, பெரியார் பேசியதை, அம்பேத்கர் பேசியதை தான் மேற்கோள் காட்டி  ஆ ராசா பேசியிருக்கிறார். சனாதன சக்திகள் மனுஸ்மிரிதியை பாதுகாக்க அவர் பேசியதை திசை திருப்புகிறார்கள். ஆகவே இந்து மக்கள் சனாதான சக்திகளின் சூது சூழ்ச்சிக்கு இறையாகி விடக்கூடாது. இளைய தலைமுறையினருக்கு தவறான தகவல்களை பரப்புகின்றனர் பிழை செய்வது அவர்கள் தான் நாங்கள் அல்ல எனவும் தொல் திருமாவளவன்  கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.