தமிழகத்தின் நிழல் முதலமைச்சர்களாக இரண்டு பேர்… மாஜி அமைச்சர் பரபரப்பு பேச்சு!

திமுக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சியில் கூட மின்வெட்டு ஏற்படுவதாகவும், மேலும் அதிமுக ஆட்சி எப்போது வரும் என திமுகவினரே எதிர்பார்ப்பதாக பள்ளிபாளையம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார்.‌

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் சிறப்புரை ஆற்றினர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களால் அதிமுகவுக்கு பெயர் கிடைத்து விட கூடாது என்பதற்காக அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது திமுகவின் சாதனை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடியார் இந்த இயக்கத்தை வழி நடத்தி செல்லுவார்.

பொங்கல் பரிசு அதிமுக ஆட்சி காலத்தில் உயர்த்தி கொடுத்த நிலையில், திமுக ஆட்சியில் பொங்கல் பரிசில் வழங்கப்பட்ட பொருட்களில் என்ன இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆயிரம் ரூபாய் கூட முழுதாக கொடுக்கவில்லை. திமுக அரசு வரிகளை கொரோனா காலம் என்பதால் உயர்த்த மாட்டோம் என சொல்லிவிட்டு சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

பரந்தூர் ஏர்போர்ட்டிற்கு வலுக்கும் எதிர்ப்பு; கிராம மக்கள் அதிரடி!

திமுக அரசு மின்பாரமரிப்பு செய்வதால் மின் தடை ஏற்படுவதாக கூறுகிறது. ஆனால் 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் மின் கட்டணம் உயர்த்தப்படாமலும் இருந்தது. மின் தடை இல்லாமல் மின் விநியோகமும் செய்யப்பட்டது. திமுக ஆட்சி வரும் போதெல்லாம் மின் கட்டணம் உயர்வு மட்டும் அல்ல மின்வெட்டு ஏற்படும் என்பதற்கு உதாரணமாக ஆட்சி பொறுப்பேற்ற காலத்திலிருந்தே மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

ஸ்டாலின் அடுத்த இடத்தில் இருக்கும் துரைமுருகன் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது ஐந்து நிமிடம் பேசியபோது மின்வெட்டு ஏற்பட்டது. எனவே அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் சென்று விட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வு செய்ய தர்மபுரி மருத்துவமனைக்கு இரவில் சென்றார் அப்போதும் மின்வெட்டு ஏற்பட்டது. திமுக அரசு மின் வாரியத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டுள்ளனர். கொள்ளையடிக்கவே மின் கட்டடணத்தை 26 சதவீதம் முதல் 52சதவீதம் திமுக அரசு உயரத்தி உள்ளது.

குமாரபாளையத்தில் உள்ள நகர மன்ற தலைவர் மைக்கிலேயே பேசுகிறார். ஊர் எல்லாம் கஞ்சா,மது கடை, லாட்டரி விற்பனை நடைபெறுகிறது என கூறுகிறார். பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் தனது லெட்டர் பேப்பரில் பள்ளிபாளையம் நகர பகுதியில் கஞ்சா, லாட்டரி, மது விற்பனை செய்வது அதிகரித்து உள்ளதாக கடிதம் எழுதினார்.

வரும் 2024 நாடளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி 40 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா இந்துக்கள் பற்றி அவதூறாக பேசும் ராசாவை திமுக தலைவர் ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் திமுக ஆட்சியில் தமிழகத்தில் கொலை,கொள்ளை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பெண்களிடம் நகை பறிப்பு நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் திமுகவின் கை கூலியாக இருந்து கொண்டு திமுகவுடன் சேர்ந்து என்னவெல்லாம் செய்து வருகிறார். புரட்சி தலைவர், ஜெயலலிதா ஆத்மா மூலம் அதிமுக தலைமை அலுவலக கதவை எட்டி உதைத்தற்கும் கடப்பாறையால் கதவை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசியதாவது: தமிழகத்தின் முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிழல் முதல் அமைச்சர்களாக இரண்டு பேர் செயல்பட்டு வருகின்றனர். ஒன்று சபரீசன் மற்றொன்று உதயநிதி. இதுதான் திராவிட மாடலா?. அனைத்து ஊர்களிலும் ஜி ஸ்கொயர் கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இரண்டு கோடி ரூபாய் இடம் ஒரு கோடிக்கு பெறப்பட்டு அதன் மூலம் 10 கோடி வரை வியாபாரம் செய்கின்றனர். இதுதான் திராவிட மாடலா? முதலமைச்சர் என்ற அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் தட்டிக் கேட்கக் வேண்டாமா..?

முதலமைச்சராக திமுகவினரின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் வர முடியாது. அதிமுகவை பொறுத்தவரை அடிமட்ட தொண்டனும் பொதுச்செயலாளராக வரலாம் என்பதற்கு எடப்பாடியார் ஒரு எடுத்துக்காட்டு எனவும் கூறினார். பண்ருட்டி ராமச்சந்திரனை யாருக்குமே தெரியாது. அரசியல் அனாதைகள் எல்லாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்த்து கொக்கரிக்கின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரனின் நிலைமை அவர் போகாத கட்சியே இல்லை. அவர் இதுவரை போகாத இரண்டு கட்சி பாஜக மற்றொன்று முஸ்லிம் லீக் என விமர்சித்தார்.

எடப்பாடியார் இல்லையெனில் 66 சட்டமன்ற உறுப்பினர்களை அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெற்றிருக்குமா என கூறினார். பாஜகவின் மூத்த தலைவராக அத்வானி இருக்கிறார். தற்போது மோடி பிரதமர் ஆகியுள்ளார். மோடி அத்வானி சீடர் எனவும், மோடி பிரதமர் ஆனதும் டெல்லியில் சென்று அத்வானி பிரதமர் அலுவலகத்தை அடித்து நொறுக்கினாரா என கேள்வி எழுப்பி ஓபிஎஸ்சை சாடினார். அதிமுக தொண்டர்கள் மூலம் அமைக்கப்பட்ட அஸ்திவாரத்தை யாரும் எளிதில் வீழ்த்தி விட முடியாது எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.