சென்னை
:
தமிழில்
அதிகமான
சேனல்கள்
ரசிகர்களை
கவர்ந்து
வருகின்றன.
இந்த
சேனல்களுக்கிடையில்
சிறப்பான
போட்டி
காணப்படுகின்றன.
இவற்றில்
சன்
டிவிக்கு
அடுத்தபடியாக
இரண்டாவது
இடத்தில்
விஜய்
டிவி
காணப்படுகிறது.
டிஆர்பியிலும்
இந்த
சேனல்களுக்கிடையில்தான்
அதிகமான
போட்டி
உள்ளன.
இதில்
விஜய்
டிவி
சிறப்பான
பல
நிகழ்ச்சிகளையும்
தொடர்களையும்
தொடர்ந்து
ஒளிபரப்பி
ரசிகர்களை
கவர்ந்து
வருகின்றன.
தமிழ்
சேனல்கள்
தமிழில்
அதிகமான
சேனல்கள்
ரசிகர்களை
கவரும்
முயற்சியில்
சிறப்பாக
செயல்பட்டு
வருகின்றன.
இதில்
தமிழின்
முன்னணியில்
இருக்கும்
சேனல்
விஜய்
டிவி.
இந்த
சேனல்
டிஆர்பியில்
சன்
டிவிக்கு
அடுத்தபடியாக
காணப்படுகிறது.
இந்த
சேனல்களில்
நிகழ்ச்சிகள்
மற்றும்
சீரியல்கள்
முதலிடத்தை
பிடிக்கும்
போட்டியில்
சிறப்பாக
செயல்பட்டு
வருகின்றன.
சிறப்பான
நிகழ்ச்சிகள்
விஜய்
டிவியின்
பிக்பாஸ்,
குக்
வித்
கோமாளி,
பிக்பாஸ்
ஜோடிகள்,
கலக்கப்
போவது
யாரு,
சூப்பர்
சிங்கர்,
நீயா
நானா
உள்ளிட்ட
நிகழ்ச்சிகள்
மிகவும்
பிரபலமாக
ரசிகர்களை
சிறப்பான
என்டர்டெயின்
செய்து
வருகின்றன.
மேலும்
இந்த
சேனலின்
தொடர்களான
பாக்கியலட்சுமி,
பாரதி
கண்ணம்மா,
பாண்டியன்
ஸ்டோர்ஸ்
போன்ற
சீரியல்களும்
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்து
வருகின்றன.
புதிய
சேனல்
அந்த
வகையில்
சன்
டிவிக்கு
அடுத்தபடியாக
டிஆர்பியில்
விஜய்
டிவி
கலக்கி
வருகிறது.
இந்நிலையில்
இந்த
சேனல்
புதிய
சேனல்
ஒன்றை
துவங்கவுள்ளதாக
தற்போது
அறிவித்துள்ளது.
ஏற்கனவே
விஜய்
மியூசிக்
என்ற
ஒரு
சேனலை
நடத்திவரும்
நிலையில்,
அடுத்ததாக
யூத்களை
கவரும்
வகையில்
புதிய
சேனலை
துவக்கவுள்ளது.
விஜய்
டக்கர்
புதிய
சேனல்
விஜய்
டக்கர்
என்று
புதிய
சேனலுக்கு
பெயரிடப்பட்டுள்ளது.
விரைவில்
இந்த
சேனலின்
ஒளிபரப்புகள்
துவங்கவுள்ளன.
விஜய்
டக்கர்
என்ற
இந்த
சேனலின்
புதிய
ப்ரமோ
தற்போது
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த
சேனல்
தான்
இனிமேல்
ட்ரெண்ட்
செட்டராக
அமையும்
என்று
அந்த
ப்ரமோவில்
கூறப்பட்டுள்ளது.
சிறப்பான
ப்ரமோ
அதிகமான
இளைஞர்கள்
இந்தப்
ப்ரமோவில்
இணைந்துள்ளனர்.
அழகான
பாடலும்
டான்சும்
இணைக்கப்பட்டுள்ளது.
இது
யூத்துக்கான
சேனல்
என்பதும்
இந்தப்
பாடலில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே
விஜய்
டிவியில்
இளைஞர்களை
கவரும்
வகையில்தான்
அதிகமான
நிகழ்ச்சிகள்
அமைந்துள்ளன.
இதில்
தனியாக
யூத்துக்கான
சேனல்
என்ற
விளம்பரத்துடன்
துவங்கப்பட
உள்ள
இந்த
புதிய
சேனல்,
ரசிகர்களை
வெகுவாக
ஈர்த்துள்ளது.
யூத்களுக்கான
சேனல்
தமிழில்
குழந்தைகளுக்கு
கூட
சேனல்கள்
உள்ளன.
பொதுவாக
அதிகமான
சேனல்கள்
காணப்படுகின்றன.
ஆனால்
யூத்களுக்காக
பிரத்யேகமான
ஒரு
சேனல்
என்றால்
அதில்
என்ன
மாதிரியான
நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பாகும்,
கண்டிப்பாக
சீரியல்களை
போட
முடியாது
என்பது
போன்ற
பல
யோசனைகளை
இந்த
சேனல்
தற்போது
உருவாக்கியுள்ளது.