ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்வில் பங்கேற்ற இருவரும் ராஜகுடும்பம் தொடர்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
இளவரசர் வில்லியம் அதன் பின்னர் தமது நிழலான சகோதரர் ஹரியை கண்டுகொள்ளவில்லை
ராஜகுடும்பத்திற்கு எதிராக கூறப்பட்ட கருத்துகளுக்கு இளவரசர் ஹரியும் மேகனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராணியாரின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள வந்த இருவரையும் கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜகுடும்பத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறினர்.
இந்த நிலையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்வில் பங்கேற்ற இருவரும் ராஜகுடும்பம் தொடர்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன்,
@getty
தங்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்புகளுக்கு காரணம் என்ன என்பதையும் வெளிப்படுத்தினர்.
இந்த விவகாரம் பிரித்தானிய ராஜகுடும்பத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், இளவரசர் ஹரி மற்றும் மேகனுடனான அனைத்து தொடர்புகளையும் ராஜகுடும்பம் துண்டிக்கும் அளவுக்கு எல்லைமீறி சென்றது.
மட்டுமின்றி, மேகன் விவகாரத்தில் ஏற்கனவே கருத்துவேறுபாடின் உச்சத்தில் இருந்த இளவரசர் வில்லியம் அதன் பின்னர் தமது நிழலான சகோதரர் ஹரியை கண்டுகொள்ளவில்லை என்பதுடன், அவர் மீதான கோபத்தை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியும் உள்ளார்.
@getty
மேலும், இளவரசர் பிலிப் காலமான போது பிரித்தானியா திரும்பிய ஹரி – மேகன் தம்பதியை ராஜகுடும்ப உறுப்பினர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்பதுடன், ராணியாருடனும் இளவரசர் சார்லசுடனும் நெருங்க விடவில்லை என்றே கூறப்படுகிறது.
அந்த அவமானத்துடன் அமெரிக்கா திரும்பிய ஹரி மேகன் தம்பதி, அதன் பின்னர் தற்போது தான் நாடு திரும்பினர்.
இந்த நிலையில், தற்போது ராணியார் காலமான நிலையில், ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் ஏற்படுத்திய களங்கத்தை போக்க ராஜகுடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க ஹரி- மேகன் தம்பதியை கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
@getty
மட்டுமின்றி, அவ்வாறான ஒரு நேர்காணலின் பின்னால் உள்ள நோக்கங்களை ஒப்புக்கொள் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இளவரசர் ஹரி- மேகன் தம்பதி அதற்கு ஒப்புக்கொண்டார்களா என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும் முக்கிய தருணமாக பார்க்கப்படும் ராணியாரின் பேரப்பிள்ளைகளின் இறுதி மரியாதை நிகழ்வில் வில்லியம் மற்றும் ஹரி ஒன்றாக காணப்பட்டனர்.
மேலும், துக்கமனுசரிக்கும் பிரித்தானிய மக்களுக்கு ஆறுதல் கூறும் நிகழ்வில் வில்லியம்- கேட் மற்றும் ஹரி- மேகன் தம்பதிகள் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒன்றாக கலந்து கொண்டனர்.
@getty
ஒரே காரில் நால்வரும் வந்திறங்கியது பார்வையாளர்களை பூரிப்படைய செய்ததுடன், பலர் வாழ்த்தவும் செய்துள்ளனர்.
மட்டுமின்றி, கருத்துவேறுபாடுகளை மொத்தமாக பேசிமுடித்து, இனி சகோதரர்கள் ஒற்றுமையாக ஒன்றாக செயல்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
2020ல் இளவரசர் ஹரி அமெரிக்கா சென்ற பின்னர், சகோதரர்கள் இருவரும் அதிகமாக பேசிக்கொள்வதில்லை என்றே கூறப்படுகிறது.