உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.
அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,640க்கும், சவரன் ரூ.37,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ. 8 குறைந்து ஒரு கிராம் ரூ.4,632க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.37,056க்கும் விற்பனை செய்யப்படுகிறது.