பிரிட்டன் மகா ராணி இரண்டாம் எலிசபெத் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளிலும் உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் மகா ராணி இரண்டாம் எலிசபெத், 8ம் திகதி இரவு காலமானார்.இறக்கும் போது வயது 96.
ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து அவரது உடல், 14ம் திகதி லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
பிரிட்டன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று இரவு பகலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று பிற்பகலில் வரிசை மூடப்பட்டது. ஏற்கனவே வரிசையில் இருப்பவர்கள் இன்று காலை வரை அஞ்சலி செலுத்தலாம். இந்த வரிசையில் புதிதாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது.
இரண்டாம் எலிசபெத் உடலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று(18) அஞ்சலி செலுத்தினர்.