சென்னை: கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வளர்ச்சி கற்றல், கற்பித்தல் போன்றவை தொடர்பான தீர்மானங்களை முன்வைக்கவும் ஆணையிட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகள் பள்ளியின் வளர்ச்சி ஆலோசனை வழங்கி துணை நிற்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.